உள்ளடக்கத்துக்குச் செல்

சராயன் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சராயன் ஆறு
அமைவு

சராயன் (Sarayan) கோமதி ஆற்றின் சிறிய துணை ஆறாகும். இது உத்தரப் பிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் மற்றும் சீதாபூர் மாவட்டங்களின் வழியாக ஓடுகிறது.

போக்கு[தொகு]

சராயன் ஆறு கோலா கோகாரநாத் என்ற நகரின் அருகில் உள்ள ஐதராபாத் பரகானா என்ற இடத்தில் உற்பத்தியாகிறது. தனது தொடக்க இடத்திலிருந்து ஏறத்தாழ 49 மைல்கள் தொலைவைக் கடந்த பிறகு இந்த ஆறு சீதாபூர் மாவட்டத்திற்குள் நவ்ரங்பூர் என்ற கிராமத்திற்கருகில் உள்நுழைகிறது. இந்த ஆறு சீதாபூர் மாவட்டத்தில் ஒழுங்கற்ற வளைந்த பாதைகளில் வடக்கிலிருந்து தெற்காக பயணிக்கிறது. சில மைல் தொலைவுகள் ஓட்டத்திற்குப் பிறகு, டெகாரின் கிராமத்திற்கருகில் ஜம்வாரி என்ற ஓடை இதனுடன் இணைகிறது. இதனைத் தொடர்ந்து தெற்காக பயணித்து சீதாபூர் நகரை அடைந்து அந்நகரின் மையப்பகுதியின் குறுக்காக கடந்து செல்கிறது. இறுதியாக, இந்த ஆறு கோமதி ஆற்றுடன் சிதாவ்லியில் இந்தௌரா என்ற கிராமத்திற்கருகில் இணைகிறது. [1].

இந்த ஆற்றின் போக்கின் மேல்பகுதியில், இந்த நதியானது ஆழமற்ற படுகையில் பாய்கிறது, ஆனால், தெற்காக செல்லச் செல்ல இந்த ஆறு ஆழமாகவும் உயர்ந்த கரைகளைக் கொண்டதாகவும், மணற்பாங்கானதாகவும், குறுகிய பள்ளத்தாக்குகளின் ஊடாகப் பாய்வதாகவும் அமைகிறது.

வெள்ளப்பெருக்கு மற்றும் நீர்வழிப்போக்குவரத்து[தொகு]

மழை மிகுந்த ஆண்டுகளில், இந்த ஆறு சீதாபூர் நகரிலும் மற்றும் அதன் கரையோரமாக அமைந்துள்ள மற்ற இடங்களிலும் பெரும் அழிவினை ஏற்படுத்தக்கூடிய வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்குக் காரணமானதாக அமைகிறது. ஆனால், சாதாரணமான காலங்களில், இந்த ஆறு ஒரு வடிகாலாக மக்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. இதன் கீழ் வடிநிலங்களில் சிறிய படகுப்போக்குவரத்துக்கு உகந்ததாக உள்ளது. இருப்பினும் அவ்வாறான பயன்பாடு மிகவும் அரிதாகவே இந்த ஆற்றில் நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. (India), Uttar Pradesh (1988-01-01). Uttar Pradesh district gazetteers (in ஆங்கிலம்). Government of Uttar Pradesh.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சராயன்_ஆறு&oldid=2467457" இலிருந்து மீள்விக்கப்பட்டது