சரத் குமார் (தடகள வீரர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரத் குமார்
சரத் குமார்
2014 ஆம் ஆண்டு இணை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற சரத்
தனிநபர் தகவல்
பிறப்பு1 மார்ச்சு 1992 (1992-03-01) (அகவை 31)[1]
பாட்னா, பீகார், இந்தியா[2]
கல்விஅரசியல் அறிவியல்
பன்னாட்டு தொடர்புகள்[2]
தொழில்தடகள வீரர்
ஆண்டுகள் செயலில்2010 - செயலில்
உயரம்1.79 மீ[2]
எடை55 கிகி [2]
விளையாட்டு
விளையாட்டுஉயரம் தாண்டுதல்
மாற்றுத்திறனாளர்குறையுடைய தசை வலிமை
மாற்றுத்திறன் வகைப்பாடுT42
தரவரிசை எண்3[3] (செப்டம்பர் 2016 அன்றைய நிலையில்)
நிகழ்வு(கள்)உயரந்தாண்டுதல் T42
சாதனைகளும் விருதுகளும்
மாற்றுத் திறனாளர் இறுதி6th
மிகவுயர் உலக தரவரிசை1[4]
பதக்கத் தகவல்கள்
தடகளம் (இணை உயரந்தாண்டுதல்)
நாடு  இந்தியா
சர்வதேச இணை போட்டிகள் உலக விளையாட்டுப்போட்டிகள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2017 உலக இணை தடகள விளையாட்டுப் போட்டிகள் இலண்டன் T42

சரத் குமார் (Sharad Kumar) (பிறப்பு 1 மார்ச்சு 1992) ஒரு இந்திய உயரந்தாண்டுதல் வீரரும் முன்னாள் உலக சாதனையாளரும் ஆவார். இவர் பீகார் மாநிலத்தில் பாட்னாவில் பிறந்தவர். இவர் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற இணை ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மூலமாக முதன் முதலாக பன்னாட்டு போட்டிகளில் அறிமுகமானார். 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற இணை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் உயரந்தாண்டுதலில் (T42), 12 ஆண்டு கால இணை ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் சாதனையை முறியடித்து உலகின் தங்கப்பதக்கத்தையும் உலக அளவிலான முதல் இடத்தையும் பெற்றார். குமார் 2016 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் போட்டியில் கலந்து கொண்டு ஆறாவது இடத்தில் தனது நிலையை உறுதிப்படுத்திக் கொண்டார். 2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக இணை தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.


ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

சரத் குமார் பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் 1992 ஆம் ஆண்டு மார்ச்சு 1 ஆம் தேதி பிறந்தார். இரண்டு வயதில் அவர் உள்ளூரில் நடத்தப்பட்ட போலியோ ஒழிப்பு இயக்கத்தில் வழங்கப்பட்ட போலியான போலியோ மருந்தை எடுத்துக் கொண்டபின், இடது காலின் முடக்குதலால் பாதிக்கப்பட்டார்.[5] சரத் புனித பவுல் பள்ளியில் (டார்ஜிலிங்) படித்தார். அங்கு அவர் ஏழாம் வகுப்பில் படிக்கும் போது உயரந்தாண்டுதலில் ஈடுபடத் தொடங்கினார். குறைபாடு இல்லாத இயல்பான விளையாட்டு வீரர்களுக்கு எதிராக போட்டியிட்டு பள்ளி மற்றும் மாவட்ட அளவிலான சாதனைகளை முறியடித்தார்.[6] தனது உயர் கல்விக்காக அவர் புது தில்லிக்குச் சென்றார். அங்கு அவர் மாடர்ன் பள்ளியில் தனது மேல்நிலைப் படிப்பைத் தொடர்தார். கிரோரி மால் கல்லூரியில் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றார்.[7]

தொழில் முறை வாழ்க்கை[தொகு]

பெங்களுருவில் உள்ள எசுஏஐ (SAI) பயிற்சியகத்தில் தேசிய உயரந்தாண்டுதல் பயிற்சியாளர் நிகிடன் உஃப்கான் இணை உயரந்தாண்டுதல் வீரர் சரத் குமாருக்கு சில முக்கிய உதவிக்குறிப்புகளை வழங்கிக் கொண்டுள்ளார்.

சரத் தனது முதல் பன்னாட்டு அளவிலான அறிமுக நகர்வை 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற குவாங்சௌ இணை ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மூலமாகத் தொடங்கினார். 2012 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் 1.64மீ, 2012 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுக்களில் கலந்து கொள்ள தகுதி பெற்றார். தனது 19 ஆவது வயதில், 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மலேசிய இணை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், 1.75மீ உயரம் தாண்டி அவர் உலக அளவிலான சாதனையைப் படைத்தார். இருப்பினும் இலண்டன் கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் அவர் தடை செய்யப்பட்ட மருந்தைப் பயன்படுத்தியது தொடர்பான சோதனையில் உடன்பாடான முடிவு வரப்பெற்றதால் பதக்க வாய்ப்பினை இழந்தார். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற  இணை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 1.80மீட்டர் உயரத்தைத் தாண்டி, 12 ஆண்டு கால இணை ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் சாதனையை முறியடித்து தங்கப் பதக்கத்தையும், உலகளவிலான முதல் இடத்தையும் பெற்றார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ கோடைக்கால இணை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று 1.77 மீட்டர் உயரத்தைத் தாண்டி, ஆறாம் இடத்தைப் பெற்றார். அவர் மார்ச்சு 2015 இலிருந்து தேசிய இணைத் தடகள பயிற்சியாளர் சத்யநாராயணனிடம் பயிற்சி பெறத் தொடங்கினார்.[8] 2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக இணை தடகள விளையாட்டுப் போட்டிகளில் 1.84மீட்டர் உயரத்தைத் தாண்டி வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sharad Kumar". rio2016.com. 22 செப்டம்பர் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 September 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 2.2 2.3 "Kumar Sharad". Paralympic.org. 8 ஜூன் 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 September 2016 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Indian Paralympic trio create history by ranking 1, 2 and 3 in high jump". Sportskeeda.com. 12 September 2016 அன்று பார்க்கப்பட்டது.
  4. Amit Kumar (6 November 2014). "Para-athlete Sharad Kumar fighting for recognition despite gold at 2014 Asian Games". news18.com. 13 September 2016 அன்று பார்க்கப்பட்டது.
  5. Sarakshi Rai (23 March 2015). "Discriminated and ignored:The sad story of India's paralymians". Firstpost.com. http://m.firstpost.com/sports/discriminated-and-ignored-the-sad-story-of-indias-paralympians-2053495.html. பார்த்த நாள்: 13 September 2016. 
  6. Deepika Das (9 November 2014). "Jumping on a high road". Deccan Chronicle. http://www.deccanchronicle.com/141109/sports-other-sports/article/jumping-high-road. பார்த்த நாள்: 13 September 2016. 
  7. K P Mohan (19 September 2012). "Sharad Kumar alleges 'sabotage'". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-sports/sharad-kumar-alleges-sabotage/article3913127.ece. பார்த்த நாள்: 13 September 2016. 
  8. "Mariyappam Thangavela wins gold, Varun Bhati wins bronze in mens T42 high jump". The Indian Express. http://indianexpress.com/article/sports/sport-others/mariyappan-thangavelu-gold-varun-bhati-bronze-mens-t42-high-jump-paralympics-rio-india-3023510/. பார்த்த நாள்: 13 September 2016.