உள்ளடக்கத்துக்குச் செல்

சம ஆசனம், சம போசனம் இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சம ஆசனம், சம போசனம் இயக்கம் என்பது இலங்கையில் 1900 களின் தொடக்கப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஒரு சமூக இயக்கம் ஆகும். குறிப்பாக உடுவில் பெண்கள் பாடசாலையில் நெவின்ஸ் செல்வதுரை, ஹன்டி பேரின்பநாயகம், வண. பிக்னெல் பாதிரியார், வண. மத்யூஸ் சுவாமிகள், மருத்துவர் ஜேம்ஸ், சி. பொன்னம்பலம், எஸ். டபிள்யூ மகாதேவா மற்றும் பலர் ஒன்றுகூடி தொடங்கிய இயக்கம் ஆகும். இந்த இயக்கம் தாழ்த்தப்பட்டவர்கள் பள்ளிகளில், பொது இடங்களில் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதை எதிர்த்தது.[1]

விளைவுகள்[தொகு]

1930 இல் இலங்கையில் சம ஆசனம், சம போசனம் சட்டமாக்கப்பட்டதற்கு இந்த இயக்கத்தின் செயற்பாடுகள் ஒரு காரணமாக அமைந்தன. அவ்வாறு சட்டமாக்கப்பட்ட போது சாதிய சார்புடையவர்கள் பதினைந்து பாடசாலைகளை தீ வைத்து எரித்தனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. அ. கௌரிகாந்தன் (1992). "யாழ்ப்பாண சமூக உருவாக்கமும் விபுலானந்தரும் (1920களில்)". சாளரம் வெளியீடு. பார்க்கப்பட்ட நாள் 14 சனவரி 2017.
  2. சி. கா செந்திவேல், ந. இரவீந்திரன். 1989). இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும். சென்னை: தெற்குப் பதிப்பகம்.