நெவின்ஸ் செல்வதுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெவின்ஸ் செல்வதுரை
Nevins Selvadurai
இலங்கை அரசாங்க சபையின் ஊர்காவற்துறை தொகுதி உறுப்பினர்
பதவியில்
1934–1935
பின்னவர்வைத்திலிங்கம் துரைசுவாமி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1863-10-15)15 அக்டோபர் 1863
இறப்பு28 ஏப்ரல் 1938(1938-04-28) (அகவை 74)
முன்னாள் கல்லூரியாழ்ப்பாணம் மத்திய கல்லூரி
சென்னை மாநிலக் கல்லூரி
தொழில்ஆசிரியர்
இனம்இலங்கைத் தமிழர்

நெவின்ஸ் செல்வதுரை (Nevins Selvadurai, 15 அக்டோபர் 1863 – 28 ஏப்ரல் 1938) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், ஆசிரியரும் ஆவார். இலங்கை அரசாங்க சபையின் ஊர்காவற்துறை உறுப்பினரராகவும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபராகவும் இருந்தவர்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

செல்வதுரை 1863 அக்டோபர் 15 இல் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய வில்லியம் நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளை என்பவருக்குப் பிறந்தார்.[1] வட்டுக்கோட்டை ஆரம்பப் பாடசாலையிலும், பின்னர் யாழ்ப்பாணம் உவெசுலியன் மத்திய கல்லூரியிலும் கல்வி கற்றார். 15 வயதில் சென்னை, மாநிலக் கல்லூரியில் சேர்ந்து அறிவியலில் சிறப்புப் பட்டம் பெற்றார்.[1]

முத்துசுவாமி வாட்சன் என்பவரின் மகள் மார்கரெட் அன்னி பாப்பம்மா என்பவரை 1889 இல் திருமணம் புரிந்தார்.[1] இவர்களுக்குப் பல பிள்ளைகள் இருந்தனர்.

ஆசிரியப் பணி[தொகு]

பட்டம் பெற்றுத் திரும்பிய பின்னர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஆசிரியப் பணியைத் தொடங்கினார்.[1] 1892 முதல் 1926 வரை இல் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபராகப் பணியாற்றினார்.[1] பின்னர் சிறிது காலம் கண்டி திரித்துவக் கல்லூரியில் அதிபராகப் பணியாற்றினார். 1923 சூன் மாதத்தில் கல்வியில் இவரது சேவைக்காக பிரித்தானிய இராச்சியத்தின் ஆணை விருது (Order of the British Empire) வழங்கப்பட்டது[2]

அரசியலில்[தொகு]

ஆசிரியப் பணியில் இருந்து இளைப்பாறிய பின்னர், கல்வி வாரியன், பல்கலைக்கழகக் கல்லூரிப் பேரவை போன்ற பல அமைப்புகளில் உறுப்பினராக இருந்து சேவையாற்றினார்.[1]

1934 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்க சபைக்கு ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அதன் உறுப்பினரானார்.[1][3][4] 1936 தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு அருணாசலம் மகாதேவாவிடம் தோற்றார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. பக். 188–189. http://www.noolaham.org/wiki/index.php?title=Dictionary_of_Biography_of_the_Tamils_of_Ceylon. 
  2. "Supplement". The London Gazette. 2 சூன் 1923. http://www.london-gazette.co.uk/issues/32830/supplements/3951. 
  3. Rajasingham, K. T.. "Chapter 7: State Councils - elections and boycotts". Sri Lanka: The Untold Story இம் மூலத்தில் இருந்து 2009-06-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090624090234/http://atimes.com/ind-pak/CI22Df02.html. பார்த்த நாள்: 2013-06-11. 
  4. Dissanayake, T. D. S. A.. "Chapter 1". War or Peace.... http://www.sangam.org/ANALYSIS/DissanayakaChap1.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெவின்ஸ்_செல்வதுரை&oldid=3218974" இலிருந்து மீள்விக்கப்பட்டது