சம அளவு அலுமினியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சம அளவு அலுமினியம் (Alluminium equivalent ) எக்சு கதிர் குழாய் அதற்குண்டான கூண்டில்(Housing) நிலையாக வைக்கப்பட்டுள்ளது. கருவியை இயக்கும் போது தோற்றுவிக்கப்படும் கதிர்கள் முதலில் குழாயின் கண்ணாடிச் சுவரைக் கடந்து வெளிப்படுகிறது.கூண்டில் குழாயினைச் சுற்றி எண்ணெய் உள்ளது.இவ் எண்ணெய் ஓரளவு வெப்பத்தினை அகற்றவும் மின்கடவாப் பொருளாகவும் பயன்படுகிறது.இதிலும் சிறிது கதிர்கள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மேலும் கதிர்கள் வெளிப்பட கூண்டில் அமைக்கப்பட்டுள்ள தடித்த நெகிளி( Plastic) வழியாக வெளிப்படுகிறது. அங்கும் கதிர்கள் ஏற்கப்படுகின்றன.இவ்வாறு கருவியைவிட்டு வெளிப்படும் முன், கண்ணாடிச்சுவர், எண்ணெய் ,நெகிளி என்று பல்வேறு பட்ட பொருட்களில் ஏற்கப்பட்டு செறிவு குறைகிறது.இது வடிகட்டி போல் செயல்படுகிறு.இதனை கட்டுப்படுத்த முடியாது. எனவே இது உள்ளார்ந்த வடிகட்டி (Inherent filter ) எனப்படும்.மேலும் வடிகட்ட கூடுதல் அலுமினியத் தகடுகள் சேர்த்து (Added filter ) மென்கதிர்கள் அகற்றப்படுகின்றன. உள்ளார்ந்த வடிகட்டி கதிர்களின் செறிவினை எவ்வளவு குறைக்கிறதோ அதே அளவு செறிவினைக் குறைக்க தேவைப்படும் அலுமினியத் தகட்டின் கன அளவு, சம அளவு அலுமினியம் எனப்படுகிறது. உள்ளார்ந்த வடிகட்டி + கூடுதல் வடிகட்டி= பயனுறு வடிகட்டி(.Effective filter) ஆகும்.

பொதுவாக சம அளவு அலுமினியம் என்பது , ஒரு குறிப்பிட்ட கனளவுள்ள பொருள் எக்சு கதிர்களின் செறிவினை எவ்வளவு குறைகுகிறதோ அதேஅளவு செறிவினைக் குறைக்க தேவைப்படும் அலுமினியத்தின் கன அளவு ஆகும்.

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. funtamentals of radiology- Massy and Meridith
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம_அளவு_அலுமினியம்&oldid=3596818" இலிருந்து மீள்விக்கப்பட்டது