சம்ஜவுதா விரைவுத் தொடருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சம்ஜவுதா விரைவுத் தொடருந்து (Samjhauta Express) என்பது இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிலுள்ள இரு நகரங்களுக்கிடையே இயக்கப்படும் தொடருந்து சேவையாகும். சிம்லா ஒப்பந்தத்தின் பயனாக 1976 ஆம் ஆண்டு ஜூலை 22 அன்று இந்த சேவை தொடங்கப்பட்டது. அப்போது இந்தியாவில் பஞ்சாப்பின் அமிர்தசரஸ் மற்றும் பாகிஸ்தானில் லாகூர் நகரங்களுக்கிடையே 42 கி.மீ. தொலைவிற்கு இயக்கப்பட்டது. 1980களில் கலிஸ்தான் இயக்கத்தின் அச்சுறுத்தல் காரணமாகச் சேவையை இந்திய எல்லைக்கு அருகாமையிலுள்ள அடாரியுடன் நிறுத்தப்பட்டது. தொடக்கத்தில் தினசரி சேவையாக இருந்தாலும் 1994 ஆம் ஆண்டு முதல் வாரம் இரு முறை செவ்வாய் மற்றும் வெள்ளி போன்ற நாட்களில் மட்டுமே இயக்கப்படுகின்றது.

தில்லி சந்திப்பு தொடருந்து நிலையம்
அமிர்தசரஸ் தொடருந்து நிலையம்
லாகூர் தொடருந்து நிலையம்