சமுத்ர ரக்சா அருங்காட்சியகம், போரோபுதூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Samudra Raksa Museum
சமுத்ர ரக்சா அருங்காட்சியகம்
மறுவடிவமைப்பு செய்யப்பட்ட போரோபுதூர் கப்பல்
Map
நிறுவப்பட்டது2005
அமைவிடம்போரோபுதூர், மெகலாங், மத்திய ஜாவா, இந்தோனேசியா
வகைகடல்சார் அருங்காட்சியகம், தொல்பொருள் அருங்காட்சியகம்
வலைத்தளம்The Cinnamon Route

சமுத்ர ரக்சா அருங்காட்சியகம்(Samudra Raksa Museum) இந்தோனேசியாவில் மத்திய ஜாவாவில் மெகலாங் என்னுமிடத்தில் அமைந்துள்ள கடல்சார் அருங்காட்சியகமாகும்.

அமைவிடம்[தொகு]

இந்த அருங்காட்சியகமானது எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த போரோபுதூர் தொல்பொருள் வளாகத்தில் உள்ள போரோபுதூர் நினைவுச்சின்னத்திற்கு வடக்குப் பகுதியில் பல நூறு மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அருங்காட்சியகமாகும். இந்த அருங்காட்சியகத்தில் பண்டைய இந்தோனேசியாவிற்கும், கிழக்கு ஆப்பிரிக்காவிற்கும் இடையே நடைபெற்ற பண்டைய கடல்சார் வணிகம் தொடர்பான பொருள்கள் விளக்கப்படுவதோடு, காட்சியும் படுத்தப்பட்டுள்ளன. இந்த நாடுகளுக்கிடையேயான வணிகப் பாதை சின்னமன் பாதை என்ற பெயர் பெற்ற பாதையாகும்.[1] இந்த அருங்காட்சியகத்தின் முக்கியமான காட்சிப்பொருளாக அமைந்தது முழு அளவில் அமைந்த, மறு உருவாக்கம் செய்யப்பட்டு அமைக்கப்பட்டுள்ள 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போரோபுதூர் கப்பல் ஆகும். இந்த கப்பலானது இந்தோனேசியாவிலிருந்து மடகாஸ்கருக்கும், கானாவிற்கும் 2003-2004 மேற்கொண்ட மிகவும் சிறப்பு வாய்ந்த கடல் பயணத்தின்போது பயன்படுத்தப்பட்ட பெருமையினைக் கொண்டதாகும். இந்த போராபுதூர் கப்பலானது 25 மீட்டர் நீளமுடையது. மத்திய ஜாவாவில் காணப்படுகின்ற போரோபுதூரில் அமைந்துள்ள எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயிலில் காணப்படுகின்ற சிற்பங்களின் மாதிரிகளைக் கொண்டு அமைந்துள்ளது.[2]

துவக்கம்[தொகு]

சமுத்ர ரக்சா அருங்காட்சியம் எனப்படுகின்ற இந்த கப்பல் அருங்காட்சியகம் 31 ஆகஸ்டு 2005 ஆம் நாளன்று இந்தோனேசியக் குடியரசின் நல்வாழ்வுத் துறையின் இணைப்பு அமைச்சரான பேராசிரியர் டாக்டர் அல்வி சிகாப் என்பவரால் திறந்து வைக்கப்பட்டது. போரோபுதூர் கடல் பயணத்தை ஆதரிக்கும் முகத்தான் அமைந்துள்ள அரசு மற்றும் உலகளாவிலான கூட்டு முயற்சியாக இது அமைந்தது. கப்பல் மாலுமிகளுக்கு ஒரு வகையில் அஞ்சலி செலுத்தும் விதமாக இந்தோனேசியாவைச் சேர்ந்த துறை சார்ந்த நுட்பாளர்கள் இதனை அமைத்தனர். போரோபுதூர் தொல்பொருள் வளாகத்திற்குள் இது உள்ளது.

சிறப்பு[தொகு]

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, இந்தோனேசியர்கள் ஆப்பிரிக்காவுக்கு நேராகச் செல்வதற்காக இந்தியப் பெருங்கடலில் பயணம் மேற்கொண்டனர். அவர்கள் சென்ற அந்த பாதை சின்னமன் பாதை அதாவது இலவங்கப்பட்டை பாதை என்றழைக்கப்பட்டது. இலவங்கப்பட்டையின் காரணமாக அது அந்தப் பெயரினைப் பெற்றது.பண்டைய மக்கள் நாடு மற்றும் கண்டம் முழுவதும் பல வகையான மசாலாப் பொருட்களை விற்று வாங்கிக் கொண்டிருந்தனர். அவற்றுள் இலவங்கப்பட்டை முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தது. அந்தக் கப்பலை முதன்முதலாகக் உருவாக்கியவர் பிலிப் பீல் என்பவர் ஆவார். அவர் ஒரு ஆங்கிலேய கடல் மாலுமியாக இருந்தார். அவர் போரோதூர் கோயிலுக்குச் சென்றிருந்தபோது அக்கோயிலில் இருந்த புடைப்புச் சிற்பங்களைக் கண்டு வியந்துள்ளார். அச்சிற்பங்களின் பெருமைகளைப் பற்றி அவர் அறிந்து, உருவாக்கிய கப்பலில் அமைத்தார்.[3]

அருகிலுள்ள கர்மவிபங்கா அருங்காட்சியகம்[தொகு]

சமுத்ர ரக்சா அருங்காட்சியத்திற்கு அடுத்ததாக போரோபுதூர் தொல்பொருள் வளாகத்தில் கர்மவிபங்கா அருங்காட்சியகம் அமைந்துள்ளது. அங்கு போரோபுதூரின் 'மறைக்கப்பட்ட பாதம்' என்ற நேர்த்தியான புடைப்புச்சிற்பம்உள்ளது. அது கூடுதல் இணைப்பால் மூடப்பட்டுள்ளது. அங்கு மேலும் போரோபுதூர் செதுக்குக் கற்களும், கலைப்பொருள்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 'மறைக்கப்பட்ட பாதம்' கூடுதல் இணைப்பால் மூடப்பட்டுள்ளது. இருப்பினும், இதற்கான நோக்கம் ஒரு மர்மமாகவே அமைந்துள்ளது. விரிவான தளம் விரிவான மற்றும் நுணுக்கமான வடிவமைப்பு மற்றும் அழகியல் மற்றும் மதக் கருத்துகளை உள்ளடக்கிய நிலையில் இவை கட்டப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் காணக்கூடிய வகையில் அமைந்துள்ள தென்கிழக்கு மூலையைத் தவிர, மற்றவை கீழ்ப்பகுதியில் அமைந்துள்ளன. அவற்றைக் காண முடியாது. 1890ஆம் ஆண்டில் மறைக்கப்பட்ட பாத கீழ்த் தளத்தில் உள்ள பகுதி பிரித்தெடுக்கப்படும்போது அவற்றை காசியன் செபாஸ் புகைப்படம் எடுத்தார்.

குறிப்புகள்[தொகு]

  1. Naʻalehu Anthony (September 25, 2015). "The Borobudur Temple Ship: Bringing a Memory Back to Life". National Geographic. பார்க்கப்பட்ட நாள் 3 November 2015.
  2. Peter Janssen (15 September 2003). "Borobudur Ship Follows Ancient Spice Route". Arab News. http://www.arabnews.com/node/237368. பார்த்த நாள்: 3 November 2015. 
  3. The Great Ship of Maritime In Indonesia Another Called As Samudra Raksa Museum Gallery

பார்வை நூல்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]