கர்மவிபங்கா அருங்காட்சியகம், போரோபுதூர்
![]() Javanese Pendopo of Karmawibhangga Museum | |
![]() | |
நிறுவப்பட்டது | 1983 |
---|---|
அமைவிடம் | தமான் விசாடா சண்டி போரோபுதூர், ஜலான் பத்ராவதி, போரோபுதர், மகேலங், மத்திய ஜாவா 56553, இந்தோனேசியா |
வகை | தொல்பொருள் அருங்காட்சியகம் |
வலைத்தளம் | Borobudur Museum |
கர்மவிபங்கா அருங்காட்சியகம் (Museum Karmawibhangga) இந்தோனேசியாவின் மத்திய ஜாவா பகுதியில் போரோபுதூர் தொல்பொருள் பூங்கா எல்லைக்குள் அமைந்துள்ள தொல்பொருள் அருங்காட்சியகம் ஆகும். இது போரோபுதூர் அருங்காட்சியகம் என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தோனேசியாவின் மாகேலாங் ரீஜென்சி என்னுமிடத்தில் உள்ள 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போரோபுதூர் புத்த நினைவுச்சின்னத்திற்கு வடக்கே சில நூறு மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு தொல்பொருள் அருங்காட்சியகமாகும் . போரோபுதூரின் மறைக்கப்பட்ட பாதம் என்னுமிடத்தில் செதுக்கப்பட்ட கர்மவிபங்கா புடைப்புச் சிற்பங்கள் இங்கு இடம் பெற்றுள்ளன.[1] பிரித்து எடுக்கப்பட்ட சில போரோபுதூர் கற்கள், போரோபுதூர் மற்றும் மத்திய ஜாவாவைச் சுற்றி அமைந்துள்ள இடங்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட இங்கு காணப்படுகின்றன. இந்த அருங்காட்சியகத்தில் போரோபுதூர் கட்டிடக்கலை மற்றும் கட்டமைப்பைக் கொண்ட தொல்பொருள் கலைப்பொருட்கள் காணப்படுகின்றன. யுனெஸ்கோ வழிகாட்டுதலின் கீழ் 1975 மற்றும் 1982 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நடத்தப்பட்ட மறுசீரமைப்பு திட்டத்தின் கீழான ஆவணங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகம் பாரம்பரிய ஜாவானீஸ் கட்டிடக்கலையில் கட்டப்பட்டதாகும் : பெண்டோபோ பெவிலியன் கொண்ட ஜாக்லோ வீடு.[2] 1983 ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்ட போரோபுதூர் தொல்பொருள் பூங்காவிற்குள் இந்த அருங்காட்சியகம் ஒருங்கிணைந்த வகையில் அமைந்துள்ளது.
போரோபுதூர் தொல்பொருள் வளாகத்திற்குள் அமைந்துள்ளது, கர்மவிபங்கா அருங்காட்சியகத்தின் மேற்குப் பக்கத்தில், சமுத்ர ரக்சா அருங்காட்சியகம் உள்ளது. அதில் போரோபுதூர் கப்பல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. போரோபுதூர் தொல்பொருள் பூங்காவின் நுழைவுச்சீட்டின் அனுமதியோடு கொண்டு பார்வையாளர்கள் இந்த இரண்டு அருங்காட்சியகங்களையும் பார்வையிடலாம்.
காட்சிப்பொருள்கள்
[தொகு]இந்த அருங்காட்சியகம் போரோபுதூர் தொல்பொருள் பூங்காவிற்குள் ஒருங்கிணைந்த பகுதியாக கட்டப்பட்டதாகும்.
கர்மவிபங்கா புடைப்புச்சிற்பங்கள்
[தொகு]

போரோபுதூரின் அடிப்படை நிலையில் பௌத்த கருத்தாக்கத்தின் மூன்று மண்டலங்களில் முதலாவது விளக்கப்பட்டுள்ளது; காமதாது அல்லது "ஆசை சாம்ராஜ்யம் ". எனப்படுகின்ற இந்த சிற்பத்தொடர் மகாகர்மவிபங்கா அல்லது கர்மவிபங்கா என அழைக்கப்படுகின்ற ஆசை சாம்ராஜ்யத்தினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.[3]
பிற ஒழுக்கக்கேடான சித்தரிப்புகளுடன் திருட்டு, கொலை, கற்பழிப்பு, கருக்கலைப்பு மற்றும் சித்திரவதை ஆகியவற்றின் சித்தரிப்புகளும் காணப்படுகின்றன. இந்த செயல்களின் நேரடி அல்லது மறைமுக முடிவானது ஒரு கொடூரமான மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை என்பது இதன்மூலம் சுட்டப்பட்டுள்ளது. நரகத்தின் சித்தரிப்பில் உடல்களை ரம்பத்தைக் கொண்டு வெட்டுதல், எரியும் உடல்கள் மற்றும் சூடான சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருத்தல் ஆகியவை அடங்கும். போற்றுதலுக்குரியவனவும் இதில் சித்தரிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் தொண்டு செய்தல் மற்றும் சரணாலயங்களில் யாத்திரை செல்லல் போன்றவை அடங்கும். மேலும், இணைந்து பணிகளை மேற்கொள்ளல், விவசாய முறைகள் மற்றும் திட்டமிட்ட பெற்றோர் நிலை உள்ளிட்டவையும் காணப்படுகின்றன. நரகத்தின் வலிகள் மற்றும் சொர்க்கத்தின் இன்பம் ஆகியவையும் இவற்றில் விளக்கப்பட்டுள்ளன. சம்சாரம் (பிறப்பு மற்றும் இறப்பின் முடிவற்ற சுழற்சி) பற்றிய விளக்கத்துடன் முழுமையான அன்றாட வாழ்க்கையின் காட்சிகளும் சித்தரிக்கப்பட்டுள்ளன. சிலவற்றில் கல்வெட்டுகள் உள்ளன, அவை செதுக்குபவர்களுக்கு கூறப்படுகின்ற அறிவுறுத்தல்கள் போல அமைந்துள்ளன. சில சிற்பங்கள் முடிக்கப்படா நிலையில் அமைந்துள்ளன. மேலும் இது கோவில் கட்டி முடிக்கப்படுவதற்கு முன்னர் கூடுதல் தளம் சேர்க்கப்பட்டது என்ற கோட்பாட்டினை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.
எவ்வாறாயினும், போரோபுதூரின் இந்த 'மறைக்கப்பட்ட பாதம்' என்பது நேர்த்தியான புடைப்புச்சிற்பமாக உள்ளது. அது கூடுதல் இணைப்பால் மூடப்பட்டுள்ளது. இருப்பினும், இதற்கான நோக்கம் ஒரு மர்மமாகவே அமைந்துள்ளது. விரிவான தளம் விரிவான மற்றும் நுணுக்கமான வடிவமைப்பு மற்றும் அழகியல் மற்றும் மதக் கருத்துகளை உள்ளடக்கிய நிலையில் இவை கட்டப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் காணக்கூடிய வகையில் அமைந்துள்ள தென்கிழக்கு மூலையைத் தவிர, மற்றவை கீழ்ப்பகுதியில் அமைந்துள்ளன. அவற்றைக் காண முடியாது. 1890ஆம் ஆண்டில் மறைக்கப்பட்ட பாத கீழ்த் தளத்தில் உள்ள பகுதி பிரித்தெடுக்கப்படும்போது அவற்றை காசியன் செபாஸ் புகைப்படம் எடுத்தார். இந்த புகைப்படங்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[1]
போரோபுதூர் கல் தொகுதிகள்
[தொகு]கோயிலில் இருந்து சுமார் 4,000 கற்கள் மற்றும் செதுக்கல்கள் இந்த அருங்காட்சியகத்தில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[2]
தொல்பொருள் கண்டுபிடிப்புகள்
[தொகு]போரோபுதூரிலிருந்து எடுக்கப்பட்ட சில சிலைகள் புத்தர் சிலைகளின் பகுதிகளைப் போன்று உள்ளன. அவை இந்த அருங்காட்சியகத்தின் சேமிப்பில் உள்ளன. அவற்றுள் புகழ்பெற்ற ஒன்று "முடிக்கப்படாத நிலையிலான புத்தர்".[4] இது 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மறுசீரமைப்புப் பணிகளின்போது முதன்மையான ஸ்தூபியில் கண்டுபிடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. எனினும் இன்று இந்த கருத்து மிகவும் சந்தேகத்திற்கு இடமானதாகக் கருதப்படுகிறது.
போரோபுதூர் மறுசீரமைப்பு
[தொகு]1975 மற்றும் 1982 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் யுனெஸ்கோ தலைமையிலான போரோபுதூர் மறுசீரமைப்பு திட்டத்தின்கீழ் வரலாறு மற்றும் ஆவணங்களை இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Borobudur Museum". Borobudur Park. Archived from the original on 18 January 2013. Retrieved 20 August 2012.
- ↑ 2.0 2.1 "Borobudur Museums (Borobudur, Central Java, Indonesia)". World Guides. Retrieved 20 August 2012.
- ↑ "Museum Karmawibhangga". Museum Indonesia. Retrieved 20 August 2012.
- ↑ "Karmawibhangga Museum". Yogyes. Archived from the original on 28 மார்ச் 2013. Retrieved 20 August 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)