சமீர் ரிபாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சமீர் ஸைத் அல்-ரிபை ( ஆங்கிலம்: Samir Zaid al-Rifai ) 1966 சூலை 1 அன்று பிறந்த [1] இவர் ஜோர்தானின் அரசியல்வாதி ஆவார். இவர் டிசம்பர் 2009 14 முதல் 2011 பிப்ரவரி 9 வரை ஜோர்தானின் பிரதமராக இருந்துள்ளார்.[2]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

அல்-ரிபாய் ஜோர்தானில் ஒரு முக்கிய அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் முன்னாள் பிரதமர் சைத் அல்-ரிபாயின் மகனும், முன்னாள் பிரதமர் சமீர் அல்- ரிபாயின் பேரனும், முன்னாள் பிரதமர் பஜ்ஜாத் தல்ஹவுனியின் பேரனும் ஆவார். ரிபாய் 1988 ஆம் ஆண்டில் மத்திய கிழக்கு ஆய்வுகளில் இளங்கலை பட்டமும், ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டமும் பெற்றார். 1989 ஆம் ஆண்டில் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். கயா அகேப் அல்-பாயசு என்பவரை மணந்தார். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனர்.

தொழில்[தொகு]

சமீர் அல்-ரிபா மாகெல்லன் உலகளாவிய ஆலோசகனை நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராகவும், கெஸ் நிறுவனத்தின் (மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா) தலைவராகவும், தற்போது ஜோர்தானின் காசமைட் இராச்சியத்தின் சட்டசபையில் துணைத் தலைவராகவும் உள்ளார். சட்டசபையில் பணியாற்றுவதற்கு முன்பு, சமீர் அல்-ரிபாய் 2009 டிசம்பர் 14, முதல் 2011 பிப்ரவரி 1 வரை ஜோர்தானின் 38 வது பிரதமராக பதவி வகித்தார். நவம்பர் 2015 இல் சட்டசபையின் துணைத் தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, சமீர் 2013 மற்றும் 2015 க்கு இடையில் சட்டசபை வெளியுறவுக் குழுவின் தலைவராக இருந்தார்.

ஒரு பிரதமராக, சமீர் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் முன்னேற்றத்தின் தெளிவான ஏழு அம்ச திட்டத்தை உருவாக்கிய ஒரு அரசாங்கத்தை வழிநடத்தினார். அனைத்து திட்டங்களின் முன்னேற்றத்தையும் கண்காணிக்கவும் மதிப்பீடு செய்யவும் செயல்திறன் அட்டவணைகள் உருவாக்கப்பட்டன. அவர் பதவியில் இருந்த காலத்தில் ஏற்பட்ட முக்கிய சாதனைகள், அரசாங்கப் பற்றாக்குறையை 30% குறைப்பதற்கான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் இராச்சியத்தின் நிதி நிலைத்தன்மையை வலுப்படுத்துவது; ஒட்டுமொத்த வணிக சூழலை வலுப்படுத்துதல்; அரசாங்கத்தின் நிர்வாக, சட்டமன்ற மற்றும் நீதித்துறை கிளைகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்துதல்; நவம்பர் 2010 இல் வெற்றிகரமான தேசிய தேர்தல்களை நடத்தியது, இது பதிவுசெய்யப்பட்ட வாக்காளர் பதிவைப் பெற்றது மற்றும் தேசிய அரசியல் மற்றும் சமூக விவகாரங்களில் இளைஞர்களின் பங்களிப்பை ஊக்குவித்தது ஆகியன அடங்கும்.

அவரது தலைமையின் கீழ், அரசாங்கம் பல முக்கிய உள்கட்டமைப்பு முதலீட்டு திட்டங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடனான பிற முக்கிய கூட்டு ஒப்பந்தங்களின் வளர்ச்சியையும் துரிதப்படுத்தியது. தேசிய ரயில்வே, செங்ககடலின் நீர் அனுப்பும் முறை, அணுசக்தி ஒத்துழைப்பு, சூரிய மற்றும் ஷெல் எண்ணெய் திட்டங்கள் தொடர்பான பிற முக்கிய கூட்டு ஒப்பந்தங்கள் ஆகியவை இதில் அடங்கும்.

தான் பதவியேற்ற முதல் வாரத்தில் ஒரு அமைச்சகத்தின் நடத்தை நெறிமுறையை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் அரசாங்கத்தின் பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மையை கணிசமாக உயர்த்திய பெருமையும் சமீர் பெற்றார். தேசிய மற்றும் உள்ளூர் திட்டங்களைக் கண்காணிக்க குடிமக்கள், நன்கொடையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கான திறந்த வலை அடிப்படையிலான அறிக்கையிடல் தளத்துடன் பிரதம அமைச்சகத்தில் ஒரு விநியோக அலகு ஒன்றை அவர் உருவாக்கினார். மற்றும் குடிமக்கள் புகார் அளிக்க வழிமுறை ஒன்றை தொடங்கினார்.

விருதுகள் மற்றும் கௌரவங்கள்[தொகு]

அவர் அல்-கவ்காப் அல் உர்துனி மற்றும் அல்-இசுதிக்லால் என்றப் பெயர்களால் கௌரவிக்கப்பட்டார்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "H.E. Samir Zaid Al-Rifai". Central Electricity Generating Company, Annual Report 2007. மூல முகவரியிலிருந்து 31 மார்ச் 2010 அன்று பரணிடப்பட்டது. பிழை காட்டு: Invalid <ref> tag; name "cegco" defined multiple times with different content
  2. http://www.etaiwannews.com/etn/news_content.php?id=1128633&lang=eng_news
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமீர்_ரிபாய்&oldid=3243105" இருந்து மீள்விக்கப்பட்டது