சமிக்ஞை முறைமை 7

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சமிக்ஞை முறைமை #7("SS7") ஒரு தொலைபேசி சமிக்ஞை நெறிமுறையாகும். உலகத்தின் பொதுவான பழைய வகையான தொலைபேசி கட்டமைப்பின் பெரும்பங்கு வகிக்கும் நெறிமுறையாகும். இதன் மிக முக்கிய பணி என்பது தொலைத்தொடர்பு கட்டமைப்பினை பயன்படுத்தி ஒரு தொலைபேசி தொடர்பை உருவாக்குதாகும். மற்ற முக்கிய பணிகள், எண் மாற்றம், குறுஞ்செய்தி, முன்கட்டண, கட்டண சேவைகளுக்கான பேச்சு நேரக்கணிக்கீடுகளுக்கான சேவைகள் முதலியனவாம்.

இதை பொதுவாக குறுக்கி "SS7" என்றே அழைக்கப்படுகிறது. வட அமெரிக்காவில் இதை 'பொதுத்தட சமிக்ஞை முறைமை 7 (common channel signaling system 7) "CCSS7" என்று மாற்றி அழைப்பர். ஐரோப்பாவில் இதனை பொதுவாக "C7" என்று அழைப்பது வழக்கம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமிக்ஞை_முறைமை_7&oldid=1350762" இருந்து மீள்விக்கப்பட்டது