சமாரிண்டா
சமாரிண்டா | |
|---|---|
| City of Samarinda Kota Samarinda | |
இடது → வலது: சமாரிண்டா இசுலாமிய மையம், சமாரிண்டா பிரதிநிதிகள் சபை கட்டிடம், சமாரிண்டா அருங்காட்சியகம், கிழக்கு கலிமந்தான் பிரதிநிதிகள் மாளிகை, கிழக்கு கலிமந்தான் ஆளுநர் மாளிகை | |
| குறிக்கோளுரை: Samarinda Kota Tepian | |
| ஆள்கூறுகள்: 0°30′00″S 117°08′16″E / 0.50000°S 117.13778°E | |
| நாடு | |
| பகுதி | கலிமந்தான் |
| மாநிலம் | |
| நிறுவல் | 1668 |
| பரப்பளவு | |
| • நிலம் | 691.53 km2 (267.00 sq mi) |
| • நீர் | 26.47 km2 (10.22 sq mi) 3.65% |
| • பரப்பளவு தரவரிசை | 7-ஆவது[1] |
| உயர் புள்ளி | 260 m (850 ft) |
| மக்கள்தொகை (2024 மதிப்பீடு)[2] | |
| • மாநகரம் | |
| • தரவரிசை | 1-ஆவது (போர்னியோ)[3] |
| • அடர்த்தி | 1,163/km2 (3,010/sq mi) |
| • பெருநகர் | 10,50,000 |
| இனம் | சமாரிந்தான்[4] |
| மக்கள் தொகை | |
| • சமயம்[5] | இசுலாம் 91.28% சீர்திருத்தத் திருச்சபை 5.08% கத்தோலிக்க திருச்சபை 2.60% பௌத்தம் 0.91% இந்து சமயம் 0.09% கன்பூசியம் 0.03% வேறு 0.01% |
| நேர வலயம் | இந்தோனேசிய நேரம் +8 |
| அஞ்சல் | 75000 |
| தொலைபேசி | +62 |
| காலநிலை | அயனம் |
| HDI (2022) | |
சமாரிண்டா (இந்தோனேசியம்: Samarinda; ஆங்கிலம்: City of Samarinda) என்பது இந்தோனேசியா, போர்னியோ, கிழக்கு கலிமந்தான், கிழக்கு கலிமந்தான் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இந்த மாநகரம் மகாகாம் ஆற்றின் (Mahakam River) கரையில் 718 கிமீ2 (277 சதுர மைல்) நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
2022-ஆம் ஆண்டில் இந்தோனேசியாவின் வாழத் தகுதியான முதல் பத்து நகரங்களில் சமாரிண்டாவும் ஒன்று என தரவரிசைப் படுத்தப்பட்டுள்ள இந்த மாநகரம்[6][7] கிழக்கு கலிமந்தான் மனித வளர்ச்சி (பொருளியல்) கணக்கெடுப்பில் முதலிடத்தில் உள்ளது.[8] 2024-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 868,499 மக்கள்தொகையுடன், போர்னியோ தீவில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக விளங்குகிறது.[2]
கிழக்கு கலிமந்தானின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராகவும்;[9] மற்றும் ஐந்தாவது பெரிய இறக்குமதியாளராகவும் விளங்கும் சமாரிண்டா மாநகரம்,[10] கிழக்கு கலிமந்தானில் அதிக எண்ணிக்கையிலான வங்கி தலைமையகங்களைக் கொண்ட நகரமாகவும் தடம் பதிக்கிறது
பொது
[தொகு]சமாரிண்டாவிற்கு அருகாமையில் இருக்கும் ஓர் இந்துக் கோயிலின் கல்வெட்டுப் பதிவுகளின் மூலமாக, ஐந்தாம் நூற்றாண்டில் இங்கு இந்தியர்கள் குடியேறி உள்ளனர் என்று அறியப்படுகிறது. ஆயினும் 1668-ஆம் ஆண்டில் தென்பகுதியில் இருந்து பூகிஸ் மக்கள் இங்கு குடியேறினர். காலப்போக்கில் இவர்கள் கோவா சுல்தானகம் எனும் (Sultanate of Gowa) இராச்சியத்தை உருவ்வாகினர்.[11]
1846-இல் இடச்சுக்காரர்கள் இந்த நகரத்தைக் கைப்பற்றினர். 1959-இல் இந்தோனேசிய அதிபர் சுகார்னோ ஏற்படுத்திய ஒரு சட்டம் காரணமாக இந்த நகரத்தின் மக்கள் தொகை வேகமாக வளரத் தொடங்கியது.
1942-இல் சமாரிண்டா ஒரு சிறிய நகரமாக இருந்தது. அதன் அருகே பல சிறிய எண்ணெய் வயல்களும் இருந்தன. இரண்டாம் உலகப் போரில் இடச்சு கிழக்கிந்தியத் தீவுகளை சப்பானியர்கள் கைப்பற்றினர்.
சப்பானிய ஆக்கிரமிப்பு
[தொகு]இரண்டாம் உலகப் போரின் போது, சப்பானியப் பேரரசு 1942-ஆம் ஆண்டு இடச்சு கிழக்கிந்தியத் தீவுகளை ஆக்கிரமித்ததன். அதில் ஒரு பகுதியாக சமாரிண்டா நகரத்தை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.
1942-ஆம் ஆண்டு முதலாம் பாலிக்பாப்பான் போர் (1942) போரிலும் (Battle of Balikpapan), 1945-ஆம் ஆண்டு இரண்டாம் பாலிக்பாப்பான் போர் (1945) (Battle of Balikpapan), போரிலும் சமாரிண்டா நகரம் இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகளால் தாக்கப்பட்டது.
மக்கள்தொகை
[தொகு]2024-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் சமாரிண்டா மாநகரத்தின் மக்கள்தொகை 868,499 ஆக இருந்தது. 2023-2024-இல் ஆண்டு வளர்ச்சி விகிதம் 0.77% ஆகும். சமாரிண்டாவின் பெரும்பான்மையான மக்கள் பூர்வீக இந்தோனேசியர்; மற்றும் சீன வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
அரேபியர்கள் சிறுபான்மையினராக உள்ளனர்.. சமாரிண்டாவில் அமெரிக்கர்கள், கனடியர்கள், ஐரோப்பியர்கள், சப்பானியர்கள், பிலிப்பீன்சு மற்றும் கொரியர்கள் பணிபுரிகின்றனர்.[2]
| தேசியம் / தோற்றம் | 2019 | 2019% | 2020 | |
|---|---|---|---|---|
| 1 | ஆசியா | 473 | 47.2% | 315 |
| 2 | ஐரோப்பா | 172 | 17.1% | 5 |
| 3 | ஆசியான் | 168 | 16.7% | 126 |
| 4 | ஓசியானியா | 163 | 16.3% | 15 |
| 5 | அமெரிக்க ஐக்கிய நாடுகள் | 23 | 2.3% | 19 |
| 6 | ஆப்பிரிக்கா | 4 | 0.4% | 12 |
| மொத்தம் | 1,003 | 100.0% | ||
| ||||
மகாகாம் ஆற்றுப் பகுதி
[தொகு]மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "7 Kota Terbesar di Indonesia, Mana yang Paling Luas?". MSN. Archived from the original on 26 January 2023. Retrieved 26 January 2023.
- ↑ 2.0 2.1 2.2 Badan Pusat Statistik, Jakarta, 28 February 2025, Kota Samarinda Dalam Angka 2025 (Katalog-BPS 1102001.6472)
- ↑ "Borneo". WorldAtlas. 20 August 2021. Archived from the original on 29 September 2021. Retrieved 26 January 2023.
- ↑ "Masyarakat Indonesia 30-31". LIPI. 2004. Archived from the original on 26 January 2023. Retrieved 26 January 2023.
- ↑ Data Sensus Penduduk 2010 - Badan Pusat Statistik Republik Indonesia <http://sp2010.bps.go.id/index.php/site/tabel?tid=321&wid=6400000000&lang=id>
- ↑ "Tinggalkan Balikpapan, Samarinda Masuk dalam Jajaran Kota Layak Huni di Indonesia". Presisi. 12 June 2023 இம் மூலத்தில் இருந்து 13 June 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230613062012/https://presisi.co/read/2023/06/12/8707/tinggalkan-balikpapan-samarinda-masuk-dalam-jajaran-kota-layak-huni-di-indonesia.
- ↑ "Samarinda Raih Top Tier City Indonesia". Natmed. 12 June 2023 இம் மூலத்தில் இருந்து 13 June 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230613062343/https://natmed.id/samarinda-raih-top-tier-city-indonesia/?noamp=mobile.
- ↑ 8.0 8.1 "Samarinda in Figures 2021". BPS Samarinda. Archived from the original on 25 September 2021. Retrieved 25 September 2021.
- ↑ "Ekspor Kalimantan Timur 2020". BPS East Borneo. Archived from the original on 25 September 2021. Retrieved 25 September 2021.
- ↑ "Impor Kalimantan Timur 2020". BPS East Borneo. Archived from the original on 25 September 2021. Retrieved 25 September 2021.
- ↑ Ars, Moh (1986). Sejarah Kota Samarinda. Jakarta: Ministry of Education and Culture.
நூல்கள்
[தொகு]- L, Klemen (1999–2000). "Forgotten Campaign: The Dutch East Indies Campaign 1941-1942".
வெளி இணைப்புகள்
[தொகு]- GovSamarinda பரணிடப்பட்டது 15 மே 2010 at the வந்தவழி இயந்திரம் Samarinda Government portal