சமயம் அறிவியல் முரண்பாடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சமயத்துக்கும் அறிவியலுக்கும் பல முனைகளில் முரண்பாடு இருப்பதாக பலரால் வாதிக்கப்படுகிறது. பல சமய புனித நூல்களில் கூறப்படும், இறைவாக்காக் கருதப்படும் பல கூற்றுக்கள் தற்போதைய அறிவியலின் படி பிழையாக நிரூபிக்கப்பட்டுள்ளன. அறிவியலின் வளர்ச்சிக்கும், அதன் வழிமுறைகளுக்கும் சமயம் தடையாக இருந்து வந்துள்ளது. அறிவியலில் தங்கி உள்ள தற்கால உலகில், அந்த அறிவியல் கோட்பாடுகள் எவற்றிலும் இறை என்ற கருதுகோள் தேவையற்றதாக இருக்கிறது. இவ்வாறு பல முரண்பாடுகள் அறிவியலுக்கும் சமயத்துக்கும் இடையே முன்வைக்கப்படுகின்றன.

தகவற் பிழை[தொகு]

புனித நூல்களில் கூறப்படும் பல கூற்றுக்கள் அறிவியலின் தற்போதைய அறிவின் படி பிழையாக நிரூபிக்கப்பட்டுள்ளன. எ.கா உலகம் 6000 ஆண்டுகள் மட்டுமே என பைபிளில் கூறப்பட்டுள்ளது. அறிவியல் உலகம் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு மேலான கால வரலாற்றை உடையது என்று கூறுகிறது.

சமயத்தின் அறிவியல் எதிர்ப்பு[தொகு]

சமயம் அறிவியலின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்துள்ளது.

இறையின் தேவையின்மை[தொகு]

அறிவியல் கோட்பாடுகளின் அல்லது விதிகளின் விளக்கத்துக்கு இறை என்ற கருதுகோள் தேவையற்றது.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]