சமந்தா ஸ்மித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமந்தா ஸ்மித்
ஸ்மித் 1983 இல் சோவியத்தில் ஆர்டெக் முகாமுக்கு வருகை தருகிறார்
பிறப்புசமந்தா ரீட் ஸ்மித்
(1972-06-29)சூன் 29, 1972
ஹவ்ல்டன், மைனே, அமெரிக்கா
இறப்புஆகத்து 25, 1985(1985-08-25) (அகவை 13)
ஆபர்ன், மைனே, அமெரிக்கா
இறப்பிற்கான
காரணம்
வானூர்தி விபத்து
கல்லறைஅமிட்டி, மைனேவில் ஆஷஸ் எஸ்டாப்ரூக் கல்லறைத் தோட்டத்தில் புதைக்கப்பட்டது
மற்ற பெயர்கள்
  • America's Youngest Ambassador
  • America's Littlest Diplomat
  • America's Sweetheart[1] (US)
  • The Goodwill Ambassador (USSR)
பணி
  • அமைதி ஆர்வலர்
  • குழந்தை நட்சத்திரம்
செயற்பாட்டுக்
காலம்
1982–1985
கையொப்பம்

சமந்தா ரீட் ஸ்மித் (Samantha Reed Smith, 29, சூன் 29, 1972 - ஆகத்து 25, 1985) என்பவர் ஒரு அமெரிக்க அமைதி ஆர்வலருரும், மான்செஸ்டர், மைனேவைச் சேர்ந்த ஒரு குழந்தை நட்சத்திரமும் ஆவார். இவர் அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையிலான பனிப்போரின் போது போர் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக பிரபலமானார். 1982 ஆம் ஆண்டில், சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடமைக் கட்சிக்கு புதிதாக பொதுச் செயலாளராக நியமிக்கபட்ட யூரி அந்திரோப்வொவுக்கு பனிப்போருக்கு முடிவு கட்டுங்கள் என்று ஸ்மித் ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சோவியத் ஒன்றியத்தின் செய்தித்தாளான பிராவ்தாவில் அக்கடிதம் வெளியானது. மேலும் சோவியத் ஒன்றியத்துக்கு வருமாறு விடுக்கப்பட்ட அழைப்புடனாக ஒரு தனிப்பட்ட பதிலைப் பெற்றார். அந்த அழைப்பை இவர் ஏற்றுக்கொண்டார்.

ஸ்மித் இரு நாடுகளிலும் " நல்லெண்ண தூதர் " என்று ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தார். அமெரிக்காவின் இளைய தூதராக அறியப்பட்டார். பின்னர் யப்பானில் சமாதான நடவடிக்கைகளில் பங்கேற்றார். [2] இவரது தந்தை ஆர்தரின் ( கல்வியாளர்) உதவியுடன், இவர் சோவியத் யூனியனுக்கு பயணம் என்ற பெயரிலான ஒரு புத்தகத்தை எழுதினார். அந்தப் புத்தகம் இவரது சோவியத் பயணம் குறித்தது ஆகும். பின்னர் இவர் குழந்தை நட்ச்சத்திரமாகி, தி டிஸ்னி சேனலுக்காக 1984 அமெரிக்க அதிபர் தேர்தலின்போது குழந்தைளுக்கான சிறப்பு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். மேலும் லைம் ஸ்ட்ரீட் என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்தார். ஸ்மித் 1985 ஆம் ஆண்டு தன் 13வது வயதில் இலண்டனில் இருந்து திரும்பும் வழியில் பார் ஹார்பர் ஏர்லைன்ஸ் வானூர்தி 1808யில், ஏற்பட்ட வானூர்தி விபத்தில் இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Evening Magazine; WBZ-TV, Boston, 1985
  2. Saint-André, Yvette Irène. "I Remember Samantha Smith: Goodwill Ambassador". U.S. Embassy in Moscow. பார்க்கப்பட்ட நாள் February 27, 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமந்தா_ஸ்மித்&oldid=3821815" இலிருந்து மீள்விக்கப்பட்டது