சமத்துவபுரம்
Appearance
தமிழ்நாடு அரசு அனைத்து சாதியினரும் ஒரே இடத்தில் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை சமத்துவபுரம் எனும் பெயரில் அனைத்து மாவட்டங்களிலும் உருவாக்கி வருகிறது. இந்தக் குடியிருப்புப் பகுதியில் வணிக மையங்கள், விளையாட்டு மைதானங்கள், பொது இடங்கள், பூங்காக்கள், படிப்பகங்கள் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சமத்துவபுரம் குடியிருப்புப் பகுதியில் அனைத்து சாதியினருக்கும் இலவசமாய் வீடுகள் ஒதுக்கித் தரப்படுகின்றன.
முதல் சமத்துவபுரம்
[தொகு]1998-ம் ஆண்டு, ஆகத்து மாதம் 17ஆம் திகதி தமிழக அரசால் முதல் சமத்துவபுரம், மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே, மேலக்கோட்டை என்ற இடத்தில் தொடங்கப்பட்டது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ இது உங்கள் இடம் ! 'தமிழர் தலைவர்' சீர் செய்யலாமே!. தினமலர். 19 செப்டம்பர் 2018.
{{cite book}}
: Check date values in:|date=
(help)