உள்ளடக்கத்துக்குச் செல்

சபினைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சபினைட்டு
Sabinaite
சபினைட்டு படிகங்கள்
பொதுவானாவை
வகைகார்பனேட்டு கனிமம்
வேதி வாய்பாடுNa4Zr2TiO4(CO3)4
இனங்காணல்
நிறம்நிறமற்றது முத; வெண்மை வரை
படிக அமைப்புஒற்றைச்சரிவு
மிளிர்வுபளபளப்பானது

சபினைட்டு (Sabinaite) என்பது ஓர் அரிய கார்பனேட்டு வகை கனிமமாகும். Zr2TiO4(CO3)4 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் இது விவரிக்கப்படுகிறது. ஒற்றைச்சரிவச்சு படிகத் திட்டத்தில் சபினைட்டு படிகமாகிறது. துவாரங்களுக்குள் நிறமற்றது முதல் வெள்ளைப் பட்டகம் வரையிலான நிறத்தில் சபினைட்டு படிகமாகிறது. பொதுவாக தூள் பூச்சுகளாகவும் திரள்களாகவும் காணப்படுகிறது. 3.36 என்ற ஒப்படர்த்தியை கொண்டுள்ளது.[1] பன்னாட்டு கனிமவியல் நிறுவனம் சபினைட்டை Sba என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. [2]

கனடாவின் கியூபெக் மாகணத்திலுள்ள மாண்ட்ரியல் தீவில் பாறை இடுக்குகளில் உள்ள கார்பனலைட்டு தகட்டுப் பாறைகளிலும் செயிண்ட் இலேர் மலையின் களிமப் பாறைகளில் ஊடுருவியும் சபினைட்டு காணப்படுகிறது.

முதன்முதலில் 1980 ஆம் ஆண்டு கனடாவின் மாண்ட்ரியல் தீவில் உள்ள கற்சுரங்கத்தில் கண்டறியப்பட்டது. 1930-2015 ஆம் ஆண்டுகள் காலத்தில் கனடாவின் புவியியல் ஆய்வில் பணிபுரிந்த கனிமவியலாளர் ஆன் சபீனா நினைவாக கனிமத்திற்கு சபினைட்டு என பெயரிடப்பட்டது.

பன்னாட்டு கனிமவியல் சங்கம் சபினைட்டு கனிமத்தை Sba[3] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sabinaite Mineral Data on Webmineral".
  2. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
  3. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சபினைட்டு&oldid=4145941" இலிருந்து மீள்விக்கப்பட்டது