சபா கடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சபா கடல் (Safa Kadal)(உருது ஒலிப்பு: [səfaː kədəl] ; கசுமீரி ஒலிப்பு: [safaː kədɨl] ) என்பது சம்மு காசுமீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். கடல் என்றால் காஷ்மீரில் பாலம் என்று பொருள். இந்த பாலத்தின் கீழ் ஜீலம் ஆறு பாய்கிறது. இதனால் இந்த இடத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. புகழ்பெற்ற முகலாய பேரரசரான ஔரங்கசீப்பின் (1658-1707) ஆட்சியின் போது சைப் கானால் பாலம் கட்டப்பட்டது.

இராமர் கோயில்[தொகு]

சம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள சபா கடலில் உள்ள இராமர் கோவில் தற்போது இடிந்து கிடக்கிறது. இது 1990-ல் அழிக்கப்பட்டது. இன்றும் இது அப்படியே உள்ளது. சனவரி 2022-ல் கட்டடம் புதுப்பிக்கப்படும் என்று இறுதி செய்யப்பட்டது.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Rahul Pandita and Ashish Sharma (2019-10-11). "The Valley of Abandoned Gods". Open The Magazine. பார்க்கப்பட்ட நாள் 2022-01-30.
  2. "Proposal For Restoration Of Five Heritage Buildings Finalised: Govt". Kashmir Observer. 3 January 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-01-30.
  3. Gigoo, Siddhartha (28 November 2021). "Kashmiri Pandits and the temples they left behind". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2022-01-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சபா_கடல்&oldid=3529892" இலிருந்து மீள்விக்கப்பட்டது