சபானா அக்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பதக்க சாதனைகள்
பெண்கள் தடகளம்
நாடு  பாக்கித்தான்
தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1995 சென்னை நீளம் தாண்டுதல்

சபானா அக்தர் (Shabana Akhtar) பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த ஒலிம்பிக் விளையாட்டு வீராங்கனையாவார். 1972 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[1][2] 1996 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்றபோது, ஒலிம்பிக்கில் பங்கேற்ற பாக்கித்தானின் முதல் பெண்மணி என்ற சிறப்பைப் பெற்றார்.[3][4]

1989 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை சபானா அக்தர் 100 மீ மற்றும் 200 மீ ஓட்டங்களில் 42 முறை பாக்கித்தான் நாட்டின் தேசிய வெற்றியாளர் ஆனார். மேலும் 1992 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை 400 மீட்டர், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், 4 × 100 தொடரோட்டம் ஆகிய போட்டிகளிலும் இவர் வென்றுள்ளார்.[5]

பாக்கித்தான் நாட்டிற்காக இவர் பிரதிநிதித்துவப்படுத்திய போட்டிகள் விவரம்:

  • உலக வெற்றியாளர்: 1993 (100 மீட்டர் மற்றும் 200 மீட்டர்) மற்றும் 1995 (100 மீட்டர்)
  • தெற்காசிய விளையாட்டு: 1989, 1991, 1993, 1995
  • பெண்கள் இசுலாமிய விளையாட்டுகள்: 1993, 1997
  • பெண்கள் பன்னாட்டு விளையாட்டுகள்: 1998, 2001

மேற்கோள்கள்[தொகு]

  1. Akhtar's profile from the IAAF; retrieved 2011-01-24
  2. Akhtar's bio from sports-reference.com; retrieved 2011-01-24
  3. Pakistan's female athlete hopes to uphold Olympic spirit, published sometime in 2008; retrieved in 2011-01-24.
  4. "First female competitors at the Olympics by country". Olympedia. பார்க்கப்பட்ட நாள் 8 June 2020.
  5. Akhtar's entry from the 1998 Pakistan Sports Board awards; retrieved 2011-01-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சபானா_அக்தர்&oldid=3899257" இலிருந்து மீள்விக்கப்பட்டது