உள்ளடக்கத்துக்குச் செல்

சன் வேளி, இலாசு ஏஞ்சல்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சன் வேளி என்பது அமெரிக்காவின், கலிபோர்னியாவில், இலாசு ஏஞ்சல்சு வட்டத்தில் அமைந்துள்ள நகரம் ஆகும். 2000இல் எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி இந்த நகரில் 75848 பேர் வாழ்கிறார்கள்

அமைவிடம், மக்கள் வகைகள்[தொகு]

வடகிழக்கில் சாடோ ஹில்சும், தென்கிழக்கில் பர்பாங்கும், தெற்கில் வடக்கு ஆலிவுட்டும், மேற்கில் பனோராமா சிட்டியும் எல்லைகளாக உள்ளன. வேர்டுகோ மலைகளுக்கு அடிவாரத்தில் அமைந்துள்ளதால் இங்கு திடீர் வெள்ளம் வருவதுண்டு. பல இன மக்கள் வசிக்கிறார்கள். அவர்களில் இலத்தின் அமெரிக்கர்கள் பெருமளவில் உள்ளனர்.[1]

கல்வி நிறுவனங்கள்[தொகு]

பொதுப் பள்ளிகள், தனியார்ப் பள்ளிகள், பொது நூலகம், சன் வெளி மெட்ரோலிங்க் நிலையம் ஆகியன உள்ளன. தி தியோடோர் பேயின் பவுண்டேசன் என்ற நிறுவனம் காட்டு மலர்கள், செடி கொடிகள் ஆகியவற்றை வளர்ப்பதற்கும் பராமரிக்கவும் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

பொழுதுபோக்கு ஏந்துகள்[தொகு]

சன் வேளி பொழுதுபோக்கு நடுவம்,[2] பெர்னாஜிலஸ் பொழுதுபோக்கு நடுவம்,[3] ஸ்டோன்ஹர்ச்ட் பொழுதுபோக்கு நடுவம் ஆகியன உள்ளன.[4] நீச்சல் குளங்கள்,பூங்காக்கள், உடல் பயிற்சிக் கூடங்கள், விளையாட்டுத் திடல்கள் இங்கு இருக்கின்றன.

சான்றாவணம்[தொகு]

  1. "Sun Valley," Mapping L.A., Los Angeles Times[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Sun Valley Recreation Center பரணிடப்பட்டது 2010-02-24 at the வந்தவழி இயந்திரம்." City of Los Angeles. Retrieved on March 19, 2010.
  3. "Fernangeles Recreation Center". City of Los Angeles. Retrieved on March 19, 2010.
  4. "Stonehurst Recreation Center". City of Los Angeles. Retrieved on March 19, 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சன்_வேளி,_இலாசு_ஏஞ்சல்சு&oldid=3318803" இலிருந்து மீள்விக்கப்பட்டது