சந்திர பான் பிரசாத்
சந்திர பான் பிரசாத் Chandra Bhan Prasad | |
---|---|
பிறப்பு | 1958 (அகவை 66–67) |
பணி | எழுத்தாளர், அரசியல்வாதி |

சந்திர பான் பிரசாத் (Chandra Bhan Prasad, பிறப்பு: செப்டம்பர் 1958) ஒரு தலித் படைப்பாளி. ஆங்கிலத் தினசரிகளில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிய முதல் இந்திய தலித்தும் ஆவார்.
இளமைக்காலம்
[தொகு]உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த, ஆசாம்கார்த் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், பாசி தலித் (Pasi Dalith) குடும்பத்தில் சந்திர பான் பிரசாத் பிறந்தார்.[1][2][3][4] இவரது பெற்றோர் படிக்காதவர்களாக இருந்தபோதிலும், போதுமான அளவு விவசாய நிலத்திற்குச் சொந்தக்காரர்களாக இருந்தனர்.
கல்வி
[தொகு]ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியலில் முதுமாணிப் பட்டம் பெற்றதுடன், முனைவர் பட்டத்தைப் பெற்றிடவும் பதிவு செய்தார். ஆனால், முனைவர் பட்டத்தை நிறைவு செய்யவில்லை.
அரசியல் ஈடுபாடு
[தொகு]சந்திர பான் பிரசாத், இளமாணிப் பட்டப்படிப்பு மாணவராக இருந்தபோது அரசியலில் ஈடுபட்டதுடன், இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியத்திலும் இணைந்தார். பின்னர், அவர் புதுத் தாராளமயக் கொள்கை மற்றும் தடையற்ற சந்தை பொருளாதாரத்திற்கு ஆதரவு தந்தார். ஸ்பெக்ட்ரம் பிரச்சினைக்கு சரியான முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதும் அவர் கருத்தாக இருந்தது. இடதுசாரிகளின் நடவடிக்கை "அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்ற வெறுப்பு மக்களிடம் உள்ளது,"[5] என்ற முடிவிற்கு வந்தார். பின்னர் தலித் மக்களை நகரங்களுக்குச் சென்று புதிய வாழ்க்கையை மேற்கொள்ளுமாறு ஊக்குவித்தார். தில்லி மற்றும் லக்னோவில் மட்டும் வெளிவந்து கொண்டிருந்த பயனீர் (The Pioneer) என்ற ஆங்கிலத் தினசரியில்[6], 1999 முதல் வாரந்தோறும் தலித் டைரி என்ற தலைப்பில் எழுதத் துவங்கினார். இத்தொடர் 2003 வரை தொடர்ந்தது. அந்தக் கட்டுரைகள் அனைத்தும் அதே பெயரில் தொகுக்கப்பட்டு ஒரு புத்தகமாக வெளியிடப்பட்டது.
ஆங்கில தேவி கோயில்
[தொகு]உத்தரப் பிரதேச மாநிலத்தில் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள பங்கா என்ற குக்கிராமத்தில் மக்களிடையே ஆங்கில விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக ஆங்கில தேவி கோவிலை கட்டியுள்ளார்.[7][8][9][10][11][12]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ chandrabhanprasad.com/AboutMe/Chandra_Bhan_Prasad.doc
- ↑ http://www.pasicommunity.in/pasi.php[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://www.nytimes.com/2008/08/30/world/asia/30caste.html?...all
- ↑ http://www.asianwindow.com/tag/chandra-bhan-prasad/
- ↑ [1]
- ↑ http://www.dailypioneer.com/columnists/item/50264-rebuilding-india.html
- ↑ http://www.dinamalar.com/News_Detail.asp?Id=131480&Print=1 உ.பி., யில் அமையும் "ஆங்கில தேவி' கோவில் தினமலர்
- ↑ http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=42221 பரணிடப்பட்டது 2010-10-29 at the வந்தவழி இயந்திரம் உ.பியில் ஆங்கில மொழிக்கு கோயில்
- ↑ http://tamil.oneindia.in/news/2010/10/27/lucknow-goddess-english-temple-dalits.html உ.பி. கிராமத்தில் ஆங்கிலத்திற்குக் கோவில்-தலித்கள் ஆங்கிலம் கற்பதற்காக Read more at: http://tamil.oneindia.in/news/2010/10/27/lucknow-goddess-english-temple-dalits.html
- ↑ http://www.rediff.com/news/slideshow/slide-show-1-interview-a-temple-to-english-in-india/20101103.htm This is Indian hypocrisy
- ↑ http://www.deccanherald.com/content/108725/english-devi-set-find-more.html English Devi' set to find more devotees in India
- ↑ http://www.hindustantimes.com/India-news/UttarPradesh/UP-temple-for-new-deity-English-Devi/Article1-618717.aspx பரணிடப்பட்டது 2013-06-29 at Archive.today UP temple for new deity: English Devi Hindustan Times