சத்தீசு சந்திர அகர்வால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்தீசு சந்திர அகர்வால்
Satish Chandra Agarwal
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு27 செப்டம்பர் 1928
தூன், பாரத்பூர், இராசத்தான்
இறப்பு10 செப்டம்பர் 1997
செய்ப்பூர், இராசத்தான்
துணைவர்சாந்தா அகர்வால்
பிள்ளைகள்சுனில் அகர்வால், இராகுல் அகர்வால், அல்கா குப்தா

சத்தீசு சந்திர அகர்வால் (Satish Chandra Agarwal) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1928 ஆம் ஆன்டு செப்டம்பர் மாதம் 27 ஆ, தேதியன்று இவர் பிறந்தார். இவரது இயற்பெயர் சத்தீசு குப்தா என்பதாகும். பாரதிய சனதா கட்சியின் தலைவராக இராசத்தான் மாநில அரசியலில் இவர் செயல்பட்டார். இராசத்தான் மாநிலத்தின் செய்ப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 1977 முதல் 1984 வரை ஆறாவது மற்றும் ஏழாவது நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினராக இருந்தார் [1] முன்னதாக இவர் 1957 முதல் 1972 ஆம் ஆண்டு வரை இராசத்தான் மாநில சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார், பின்னர் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1975 ஆம் ஆண்டு முதல் 1976 ஆம் ஆண்டு வரை 19 மாதங்கள் இந்திரா காந்தியின் அவசரநிலை அமுலில் இருந்தபோது கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். சமூக மற்றும் அரசியல் பணியாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அகர்வால், 1977 ஆம் ஆண்டு முதல் 1979 ஆம் ஆண்டு வரை இந்திய அரசின் நிதித்துறை இணை அமைச்சராக பணியாற்றினார். 1980-81 ஆம் ஆண்டில் பொதுக் கணக்குக் குழுவின் உறுப்பினராக இருந்தார், பின்னர் அதன் தலைவராக 1981 முதல் 1983 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.

சத்தீசு அகர்வால் 1971 ஆம் ஆண்டில் மலேசியாவின் கோலாலம்பூரில் நடந்த பொதுநலவாய பாராளுமன்ற சங்க மாநாட்டிலும், 1977 காத்மாண்டு மாநாட்டிலும், 1978 வாசிங்டனிலும், 1979 ஆம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற கொழும்பு திட்ட மாநாட்டிலும் இந்திய பிரதிநிதிகள் குழுவில் உறுப்பினராக இருந்தார். 1984 ஆம் ஆண்டு செனிவாவிற்கு சென்ற இந்தியப் பிரதிநிதிகள் குழுவில் பங்கேற்றார் மற்றும் பல்வேறு பன்னாட்டு மாநாடுகளில் கலந்து கொண்டார்.

அகர்வால் தனது 68 ஆவது வயதில் ராசத்தான் மாநிலம் செய்ப்பூரில் 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ஆம் தேதியன்று மாரடைப்பால் இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Former Members of Lok Sabha". National Informatics Centre. Archived from the original on 16 January 2014. பார்க்கப்பட்ட நாள் 25 October 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்தீசு_சந்திர_அகர்வால்&oldid=3833884" இலிருந்து மீள்விக்கப்பட்டது