சத்தியம்
சத்தியம் என்பது உண்மை அல்லது அதன் சாராம்சமாகும். இது இந்திய சமயங்களில் உள்ள ஒரு நல்லொழுக்கத்தையும் குறிக்கிறது. இது ஒருவரின் எண்ணங்கள், பேச்சு மற்றும் செயலில் உண்மையாக இருப்பதைக் குறிக்கிறது. யோகவில், சத்தியம் என்பது ஐந்து இயமங்களில் ஒன்றாகும், இது ஒருவரின் வெளிப்பாடுகள் மற்றும் செயல்களில் பொய் மற்றும் யதார்த்தத்தை சிதைப்பதில் இருந்து கட்டுப்பாடுடன் இருப்பதாகும்.
சொற்பிறப்பியல் மற்றும் பொருள்
[தொகு]வேதங்கள் மற்றும் பிற்கால சூத்திரங்களில், சத்தியம் என்ற வார்த்தையின் அர்த்தம் உண்மைத்தன்மை மற்றும் ஒரு முக்கியமான நல்லொழுக்கம் பற்றிய நெறிமுறைக் கருத்தாக உருவாகிறது.[1] ஒருவரின் எண்ணம், பேச்சு மற்றும் செயலில் உண்மையாகவும், யதார்த்தத்துடன் ஒத்துப் போவதாகவும் அர்த்தம். "சத்" என்பது பண்டைய இந்திய இலக்கியங்களில் ஒரு பொதுவான முன்னொட்டாகும். மேலும் இது நல்லது, உண்மையானது அல்லது அத்தியாவசியமானது என்று பலவாறு பொருள் தரும். எடுத்துக்காட்டாக, சத்-சாத்திரம் என்பது உண்மையான கோட்பாடு, சத்-வான் என்பது உண்மைக்கு அர்ப்பணித்தவர் என்று பொருள் தரும்.
இந்து சமயம்
[தொகு]வேத இலக்கியம்
[தொகு]வேதங்களில் சத்தியம் என்பது ஒரு மையக் கருப்பொருள். இது "ருதம்" என்ற கருத்துடன் ஒத்ததாகும் மற்றும் அவசியமானதாகக் கருதப்படுகிறது. இது ஒழுங்கு, விதி, இயல்பு, சமநிலை, நல்லிணக்கம் என்பதை குறிக்கிறது சத்தியம் இல்லாமல், பிரபஞ்சமும் யதார்த்தமும் சிதைந்துவிடும், செயல்பட முடியாது.[2][3]
உபநிடதங்கள்
[தொகு]சத்தியம் பல்வேறு உபநிடதங்களில் பரவலாக விவாதிக்கப்படுகிறது. பிருஹதாரண்யக உபநிஷத் உட்பட, சத்தியம் பிரம்மனுக்கான வழிமுறை என்று அழைக்கப்படுகிறது. பிரகதாரண்யக உபநிடதத்தின் 1.4.14 பாடலில், சத்தியம் (உண்மை) தர்மத்திற்கு (அறநெறி, நெறிமுறைகள், நீதியின் சட்டம்) சமமாக அறியப்படுகிறது.[4] தைத்திரீய உபநிடதத்தின் 11.11 பாடல் கூறுகிறது, "சத்தியம் (உண்மை) பேசு, தர்மப்படி (அறநெறி, நெறிமுறைகள், சட்டம்) நடந்துகொள்".[5] உண்மை உபநிடதங்களின் பாடல்களில் போற்றப்படுகிறது, அது இறுதியில் எப்போதும் வெற்றி பெறும் என்று முண்டக உபநிடதம்கூறுகிறது.[6]
காவியங்கள்
[தொகு]மகாபாரதத்தின் சாந்தி பருவம் கூறுகிறது, "மன்னிப்பு, உண்மை, நேர்மை மற்றும் இரக்கம் (அனைத்து நற்பண்புகளிலும்) முதன்மையானது என்று நீதிமான்கள் கருதுகின்றனர். சத்தியமே வேதங்களின் சாரம்."[7] சத்தியம் ஒரு அடிப்படை நற்பண்பு என்பதை இதிகாசம் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறது.
யோக சூத்திரங்கள்
[தொகு]பதஞ்சலியின் யோக சூத்திரங்களில், “ஒருவன் உண்மையைப் பேசுவதில் உறுதியாக இருந்தால், செயலின் பலன் அவனுக்குக் கீழ்ப்படிகிறது" என்று கூறுகிறது. யோக சூத்திரத்தில், சத்தியம் என்பது ஐந்து இயமங்களில் ஒன்றாகும்.[8] பதஞ்சலியின் போதனைகளில், ஒருவர் எப்போதும் உண்மையையோ அல்லது முழு உண்மையையோ அறியாமல் இருக்கலாம், ஆனால் ஒருவர் பொய்யை உருவாக்குகிறாரா, நிலைநிறுத்துகிறாரா அல்லது வெளிப்படுத்துகிறாரா, மிகைப்படுத்துதல், திரித்தல், புனைகதை அல்லது ஏமாற்றுதல் ஆகியவற்றை ஒருவர் அறிவார். சத்தியம் என்பது பதஞ்சலியின் யோகத்தில், மௌனத்தின் மூலமாகவோ அல்லது எந்த வித சிதைவின்றி உண்மையைக் கூறுவதன் மூலமாகவோ, அத்தகைய பொய்யிலிருந்து கட்டுப்படுத்தும் அறமாகும்.
சமணம்
[தொகு]சமண ஆகமங்களில் விதிக்கப்பட்ட ஐந்து சபதங்களில் சத்தியமும் ஒன்று. மகாவீரரால் சத்திய உபதேசமும் செய்யப்பட்டது. சமண மதத்தின் படி, பொய் சொல்லவோ, பேசவோ கூடாது.[9] சமண உரையான சர்வார்த்தசித்தியின் படி "உயிருள்ளவர்களுக்கு வலியையும் துன்பத்தையும் ஏற்படுத்துவது உண்மைகளைக் குறிக்கிறதோ இல்லையோ அது பாராட்டத்தக்கது அல்ல".
பௌத்தம்
[தொகு]சத்தியம் என்ற சொல் "உண்மை" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது நான்கு உன்னத உண்மைகளில் ஒன்று.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dhand, A. (2002). "The dharma of ethics, the ethics of dharma: Quizzing the ideals of Hinduism". Journal of Religious Ethics 30: 347–372. doi:10.1111/1467-9795.00113. https://archive.org/details/sim_journal-of-religious-ethics_fall-2002_30_3/page/347.
- ↑ Holdrege, Barbara (2004). "Dharma". In Mittal, Sushil; Thursby, Gene R. (eds.). The Hindu world. New York: Routledge. p. 215. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-21527-7.
- ↑ Sourcebook of the world's religions: an interfaith guide to religion and spirituality. Novato, Calif.: New World Library. 2000. pp. 52–55. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57731-121-8.
- ↑ Brihadaranyaka Upanishad. Translated by Madhavananda, Swami (third ed.). Advaita Ashrama. 1950. Section V.
- ↑ "taittirIya upanishad". Sanskrit Documents.
सत्यं वद । धर्मं चर, satyam vada dharmam cara
- ↑ Easwaran, E. (2007). The Upanishads. Nilgiri Press. p. 181. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1586380212.
- ↑ The Mahābhārata: Shanti parva.
- ↑ Palkhivala, Aadil (August 28, 2007). "Teaching the Yamas in Asana Class". Yoga Journal. https://www.yogajournal.com/article/teach/teaching-the-yamas-in-asana-class/.
- ↑ Jain, S.A. (1992) [1960], Reality (English Translation of Srimat Pujyapadacharya's Sarvarthasiddhi) (Second ed.), Jwalamalini Trust, p. 197,
இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.