சதுர நடனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சதுர நடனம் (Square dance) என்பது நான்கு இணைகள் ( எட்டு நடன கலைஞர்கள் ) ஒரு சதுர அமைப்பில் இணைந்து, ஒரு பக்கத்திற்கு ஒரு இணையாக நின்று சதுர மையத்தை நோக்கி நகர்ந்து ஆடுவது ஆகும். இந்த வகையான சதுர நடனங்கள் முதன்முதலாக 16ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஆவணமாக்கப்பட்டது. ஆனால் அந்த காலங்களிலேயே பிரான்ஸ் மற்றும் யுரோப்பாவிலும் பரவி இருந்தது. முன்பாக இந்த சதுர நடனமானது வட அமெரிக்காவிலிருந்து யுரோப்பாவிற்கு புலம் பெயர்ந்தவர்களின் மூலமாக வந்து இந்த அளவிற்கு வளர்ந்துள்ளது. சில நாடுகளின் சில பகுதிகளில் இந்த சதுர நடனமானது கிராமிய நடனமாகப் போற்றி பாதுகாக்கப்படுகிறது. மேற்கத்திய அமெரிக்க நாடுகளின் சதுர நடனமே இன்று உலகம் முழுவதும் அறியப்படும் ஒன்றாகும். இதற்கு காரணமாக அமைவது 20-ஆம் நுற்றாண்டில் வந்து மிகவும் பிரபலமான கவ்பாய் -யுடன் இணைத்து நடைபெற வைத்ததே ஆகும். இந்த சதுர நடனமானது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பத்தொன்பது மாநிலங்களில் அரசின் அங்கீகரிக்கப்பட்ட நடனமாக உள்ளது.[1][2]

வடகரோலினாவின் ஆஷ்வில்லேவில் மலை இசைவிழாவில் நடனமாடும் பென்ட் க்ரீக் ரான்ச் சதுர நடனக்குழுவினர்.


இந்த சதுர நடனத்தின் நடன அசைவுகள் பல நாடுகளின் பல பாரம்பரிய நடனங்களின் அசைவு மற்றும் படஅமைப்புகளைச் சார்ந்துள்ளது. அவைகளில் சில, ஆங்கில நாட்டுப்புற நடனம், காலடோனியம் மற்றும் சதுர நடன இசைத்தொகுப்பு.இது உலகிலுள்ள அனைவராலும் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டும் அனைத்து வயதினரையும் கவரும் ஒரு நடனமாகும்.

பெரும்பாலான அமெரிக்க சதுர நடன அமைவுகள் யாவும், நடன கலைஞர்களின் அசைவுகளில் சில தொடர்ச்சியான அசைவுகள் அல்லது சில அசைவுகளின் தொகுப்பால் (நடன அசைவுப் பயிற்சியாளர்களின் தனித்துவத்துடன்) அமைக்கப்படுகிறது.[3] நடன இசையில், நடன அமைப்பாளரின் ரசனை, இசைக்கருவிகளின் ஒலிக்கேற்ப நடன அசைவுகள் அமைக்கப்படுகின்றன. அவைகளில் சில இசைக்கோர்வையாகவோ, பாரம்பரிய நடன அமைப்புகளாகவோ இருக்கும். சில பாரம்பரிய சதுர நடனங்களில் நடன அமைப்பாளர் ஒரு சதுர நடன கலைஞராகவோ, இசை அமைப்பாளராகவோ இருப்பர். நவீன மேற்கத்திய சதுர நடனங்களில், நடன அமைப்பாளர் நடன மேடையிலேயே இருப்பர். அவ்வாறு இருந்து நடன அசைவுகளை அவ்வப்போதே அமைப்பர். நவீன காலங்களில், சதுர நடன கலைஞர்கள் அடிப்படையானச் சில அசைவுகளை மட்டுமே கற்றுக்கொள்கின்றனர். அவைகள் ஒவ்வொன்றிலும் நடன அசைவுத்தொகுப்புகள் அமைந்திருக்கும். ஆனால், அவைகள் வரிசைக்கிரமமாக அமைந்திருப்பதில்லை.

மேற்கோள்[தொகு]

  1. Cf. Cantwell, Robert, When We Were Good (1996), Harvard University Press, pp. 110, 253.
  2. "To Hear Your Banjo Play", film short, 1947 with Pete Seeger, Woody Guthrie, Sonny Terry, Margot Mayo's American Square Dance Group and others. Written by Alan Lomax and narrated by Pete Seeger.
  3. Szwed, John, Alan Lomax: The Man who Recorded Music, Penguin, 2010. Cf. p.144: "Margot Mayo was a Texan who pioneered folk music in New York and spearheaded the revival of folk dancing and square dancing there in the 1940s"

வெளியிணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சதுர_நடனம்&oldid=3342910" இருந்து மீள்விக்கப்பட்டது