உள்ளடக்கத்துக்குச் செல்

சதீசு சர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சதீசு சர்மா
Satish Sharma
பெட்ரோலிய இயற்கை எரிவாயு அமைச்சர்
பதவியில்
1993–1996
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
5 சூலை 2010 – 4 சூலை 2016
தொகுதிஉத்தரப் பிரதேசம்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1998–2004
முன்னையவர்அசோக் சிங்
பின்னவர்சோனியா காந்தி
தொகுதிரேபரேலி மக்களவைத் தொகுதி
பதவியில்
1991–1998
முன்னையவர்இராஜீவ் காந்தி
பின்னவர்சஞ்சாவ சிங்
தொகுதிஅமேதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1947-10-11)11 அக்டோபர் 1947
சிக்கந்தராபாத், ஐதராபாத் இராச்சியம்
இறப்பு17 பெப்ரவரி 2021(2021-02-17) (அகவை 73)
கோவா, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்இசுடெரி சர்மா
பிள்ளைகள்1 மகன், 1 மகள்
வாழிடம்(s)34, குருதுவாரா ராகாப் கானி சாலை, புது தில்லி.

சதீசு சி. சர்மா (அக்டோபர் 11,1947-பிப்ரவரி 17,2021) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர். மேலும் இந்திய அரசாங்கத்தில் மத்திய அமைச்சரவை முன்னாள் உறுப்பினராக இருந்தார். இராஜீவ் காந்தியுடனும், அவரது படுகொலைக்குப் பிறகு, அவரது மனைவியும் காங்கிரசு கட்சியின் தலைவருமான சோனியா காந்தியிடமும் கொண்டிருந்த நெருக்கம் காரணமாக மக்களவை உறுப்பினர் ஆனார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

சதீசு சர்மா 1947 அக்டோபர் 11 அன்று இந்திய மாநிலமான தெலங்காணா செகந்திராபாத் நகரில் பிறந்தார். தேராதூனில் உள்ள கர்னல் பிரவுன் கேம்பிரிட்ஜ் பள்ளியில் கல்வி பயின்ற இவர், மிசோரியின் கன்சாசு நகரில் வானூர்தி ஓட்டுநராகப் பயிற்சி பெற்றார். பரீதாபாத் மாவட்டத்தில் உள்ள புனித தோப்பான தில்லி-அரியானாவில் உள்ள மங்கர் பானி பழங்குடி நகை அருங்காட்சியகத்தை நிறுவி நடத்தி வந்த இசுடெரி சர்மாவை மணந்தார்.[1][2] இவர் 17 பிப்ரவரி 2021 அன்று கோவாவில் காலமானார்.[3]

அரசியல் வாழ்க்கை[தொகு]

சர்மான் 1986ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1991ஆம் ஆண்டில் இராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அமேதி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சனவரி 1993 முதல் திசம்பர் 1996 வரை இவர் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சராக இருந்தார். 1996ஆம் ஆண்டில் அமேதியிலிருந்து மீண்டும் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998ஆம் ஆண்டில் அமேதியில் தோல்வியடைந்த பின்னர், 1999ஆம் ஆண்டில் ரேபரேலியிலிருந்து மீண்டும் மக்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004 முதல் 2016 வரை, உத்தராகண்டம் மற்றும் உத்தரப்பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றினார்.[4]

அக்டோபர் 2021-ல், பண்டோரா ஆவணங்களில் சர்மாவின் பெயரிடப்பட்டது. இந்த ஆவணங்கள் மூலம் சர்மா சொத்துக்களை வைத்திருந்ததாகவும், பல பன்னாட்டு அறக்கட்டளைகளின் கட்டுப்பாட்டை 1995ஆம் ஆண்டு தொடங்கிக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இவை தேர்தல் ஆணையத்திற்கு அறிவிக்கப்படவில்லை. சர்மாவின் மனைவி இசுடெர்ரே சர்மாவின் கூற்றுப்படி, இவரது கணவர் கணக்குகள் எதனையும் இல்லை, மேலும் வரி செலுத்தாத சொத்து கையகப்படுத்தப்பட்டது.[5]

நாடாளுமன்றக் குழுக்கள்[தொகு]

  • உறுப்பினர், போக்குவரத்து மற்றும் சுற்றுலா குழு (1999 – 2000)
  • உறுப்பினர், பொது விமானப் போக்குவரத்து அமைச்சின் ஆலோசனைக் குழு (அக்டோபர் 2004-மே 2009 மற்றும் ஆகத்து 2009-சூலை 2010)
  • உறுப்பினர், போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாச்சாரக் குழு (ஆகத்து 2009-மே 2014)
  • உறுப்பினர், நகர்ப்புற மேம்பாட்டுக் குழு (செப்டம்பர் 2014 – 2021)

மேற்கோள்கள்[தொகு]

  1. Mangar, a hidden jewel near Delhi, தி இந்து BusinessLine, 19 September 2017.
  2. Best Places to Visit Mangar, Faridabad, Mangar Tourist Places
  3. "Gandhi loyalist Satish Sharma dies at 73". The Tribune. 17 February 2021. பார்க்கப்பட்ட நாள் 17 February 2021.
  4. "Indian National Congress". Indian National Congress (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-08.
  5. "Pandora Papers: Gandhi family friend Satish Sharma set up offshore entities". The Indian Express. 5 October 2021. https://indianexpress.com/article/express-exclusive/pandora-papers-satish-sharma-congress-7550193/. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சதீசு_சர்மா&oldid=3979218" இலிருந்து மீள்விக்கப்பட்டது