உள்ளடக்கத்துக்குச் செல்

சண்டிக் கீரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சண்டிக் கீரை
உயிரியல் வகைப்பாடு
திணை:
[தாவரம்]]
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
பி.க்ராண்டிஸ்
இருசொற் பெயரீடு
Pisonia grandis
R.Br.
வேறு பெயர்கள்

Pisonia viscosa Balf.f.

சண்டிக் கீரை (தாவரவியல் பெயர்: Pisonia grandis)[1] என்பது ஒரு பூக்கும் தாவரம் ஆகும்.

பெயர்க் காரணம்

[தொகு]

முன்நாளில் ஆம்ஸ்டெர்டாமில் வாழ்ந்த பிசோன் என்ற மருத்துவரைக் கௌரவித்து அவரது பெயரையே 'பிசோனியா' எனக் குறிப்பிட்டனர். 'க்ராண்டிஸ்' என்பது இதன் பெரிய இலையைக் குறிப்பிடுகிறது.

பரவல்

[தொகு]

சண்டிக் கீரை மரம், அந்தமான், நிக்கோபார் மற்றும் லட்சத் தீவுக் கடற்கரையோரக் காடுகளில் அதிகமாக் காணப்படுகிறது. தமிழ்நாட்டில் கிராமங்களைவிட, நகரங்களில் வீடுகளில் இங்கொன்றும் அங்கொன்றுமாகப் பரவியுள்ளது.

பொதுவிவரங்கள்

[தொகு]

இம்மரத்தின் இலைகள் அகலமாகவும், பட்டை வெண்மையாகவும் வழுவழுப்பாகவும், மலர்கள் நல்ல மணமுள்ளதாகவும் பச்சை நிறத்தில் கொத்தாக்களாகவும் இருக்கும். பறவைகளின் இறகுகளில் ஒட்டிக் கொள்வதன் மூலம் இதன் விதைப் பரவல் நடக்கிறது. இதன் வெட்டிய கிளைகளை நிலத்தில் ஊன்றி, புதிய மரங்களை உருவாக்கலாம்.

இலைகள் 30 செ.மீட்டர் நீளமும் 15 செ.மீட்டர் அகலமும் உடையவை. சாதாரணமாக பூப்பதில்லை. சில சமயங்களில் பூக்கள் உருவானால் பூங்கொத்துக்களின் கிளை நுனியிலும் இலைசந்திலும் உண்டாகும். சிறிய பூக்களாக இருக்கும். காய்கள் உருவானால், இவை 1 செ .மீட்டர் அளவில் இருக்கும். பூவிதழ்களின் அடிப்பாகம் கனியின் மேல் ஒரு உரையைப் போல் மூடிக்கொண்டிருக்கும். இந்த உரை பிசுபிசுப்பாக இருக்கும். பறவைகளின் மீது ஒட்டிக்கொண்டு, பின்னர் பிற இடங்களில் சிதறி விழும்.

பயன்கள்

[தொகு]

சண்டிக் கீரை மரத்தின் இலையை சமைத்து உண்ணலாம்.[2] சிறுநீர் பெருக்கும் பண்பு இலைகளுக்கு உள்ளது. இலையில் வைட்டமின் ஏ, தையாமின், ரிபோபிளவின்,வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் காணப்படுகிறது.

உசாத்துணைகள்

[தொகு]

1. Mani P.S & Kamala Nagarajan (1994). Valamtharum marangal - Part - 1, 2nd Ed.,Chennai, New century book house pvt ltd.,

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சண்டிக்_கீரை&oldid=4046307" இலிருந்து மீள்விக்கப்பட்டது