சட்டமுறை எடையளவுச் சட்டம் 2009

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சட்டமுறை எடையளவுச் சட்டம், 2009 (The Legal Metrology Act, 2009), நுகர்வோர் பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு, வணிகத்தில் எடை மற்றும் அளவைகளின் தரத்தை உறுதிப்படுத்தும் விதமாக இந்திய நடுவண் அரசால் உருவாக்கப்பட்ட சட்டமாகும். எடைகள் மற்றும் அளவைகளின் தரச் சட்டம், 1976, எடைகள் மற்றும் அளவைகளின் தரம் (நடைமுறைப்படுதுதல்) சட்டம், 1985 ஆகிய இரு சட்டங்களை நீக்கிவிட்டு அவற்றுக்குப் பதிலாகக் கொண்டுவரப்பட்டச் சட்டம் இதுவாகும்.

இச்சட்டத்தால் வணிகம் மற்றும் வியாபார நிறுவனங்களில் உள்ள எடைகள், அளவைகள் மற்றும் எடை, அளவை, அல்லது எண்ணிக்கை வாயிலாக விற்கப்படும்/பகிர்ந்தளிக்கப்படும் இதர பொருட்கள் முறைப்படுத்தப்படுகிறது. மாநிலங்கள் தங்களுக்கான தனிப்பட்ட விதிகளை வறையறுத்து, நடைமுறைக்கும் வரும் நாளையையும் குறிப்பிட்ட பின்னர், இச்சட்டத்தின் வகைமுறைகளை நடைமுறைப்படுத்தலாம்.

தமிழ்நாட்டில், தொழிலாளர் துணை ஆணையர் (ஆய்வுகள்), சென்னை சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அலுவலராக அறிக்கை செய்யப்பட்டுள்ளார். சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் களஅலுவலர்கள், 2009-ஆம் ஆண்டு சட்டமுறை எடையளவுச் சட்டம் மற்றும் 2011-ஆம் ஆண்டு சட்டமுறை எடையளவு (பொட்டலப் பொருட்கள்) விதிகள் ([1]) ஆகியவற்றை அமலாக்கம் செய்து வருகின்றனர்.

உசாத்துணைகள்[தொகு]