சஞ்சய் பாட்டியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சஞ்சய் பாட்டியா
Sanjay Bhatia
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில் உள்ளார்
பதவியில்
23 மே 2019
முன்னையவர்அசுவினி குமார் சோப்ரா
தொகுதிகர்னல் மக்களவைத் தொகுதி
மாநில பொதுச் செயலாளர், பாரதீய சனதா கட்சி, அரியானா
பதவியில்
பிப்ரவரி 2015 – மே 2021
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 சூலை 1967 (1967-07-29) (அகவை 56)
பானிப்பத், அரியானா, இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்அஞ்சு பாட்டியா
பிள்ளைகள்2
வாழிடம்பானிப்பத்
கல்விகுருச்சேத்திரப் பல்கலைக்கழகம், குருச்சேத்திரம்
முன்னாள் கல்லூரிகுருச்சேத்திரப் பல்கலைக்கழகம்
வேலை
இணையத்தளம்http://www.sanjaybhatia.co.in/
புனைப்பெயர்Bunty Bhai[1]
மூலம்: [1]

சஞ்சய் பாட்டியா (Sanjay Bhatia) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1967 ஆம் ஆண்டு சூலை மாதம் 29 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். வணிகவியல் பாடத்தில் பட்டம் பெற்றார். 2000 ஆம் ஆண்டில் பானிபத்து நகராட்சிக் குழுவின் தலைவராக இருந்தார். அரியானா மாநில அரசியலில் பாரதிய சனதா கட்சி அரசியல்வாதியாகச் செயல்பட்டார். 2005 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தற்போது 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அரியானாவின் கர்னால் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] பாரதிய சனதா கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளராகவும்[3][4] அரியானா காதி மற்றும் கிராமத் தொழில் வாரியத்தின் முன்னாள் தலைவராகவும் பணியாற்றினார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Lok Sabha Elections 2019: BJP's Karnal candidate Sanjay Bhatia hopes to be third-time lucky". 19 April 2019.
  2. "Karnal Election Results 2019 Live Updates: Sanjay Bhatia of BJP Wins". News18. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-05-24.
  3. "BJP ने घोषित की हरियाणा की नई कार्यकारिणी, ये रही पूरी सूची- Amarujala". Amar Ujala. பார்க்கப்பட்ட நாள் 30 March 2019.
  4. "BJP yet to pick candidates in Haryana, list likely by weekend – Times of India.". 28 March 2019. https://timesofindia.indiatimes.com/elections/lok-sabha-elections-2019/haryana/news/bjp-yet-to-pick-candidates-in-haryana-list-likely-by-weekend/articleshow/68605652.cms. 
  5. "Haryana Government has appointed Mr Siriniwas Goel of Hisar as Chairman of Haryana Warehousing Corporation and Mr Sanjay Bhatia of Panipat as Chairman of Haryana Khadi and Village Industries Board. | Directorate of Information, Public Relations & Languages, Government of Haryana". www.prharyana.gov.in. Archived from the original on 31 March 2019. பார்க்கப்பட்ட நாள் 30 March 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சஞ்சய்_பாட்டியா&oldid=3860034" இலிருந்து மீள்விக்கப்பட்டது