சஞ்சய் நிருபம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சஞ்சய் நிருபம்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
2009-2014
முன்னையவர்கோவிந்தா
பின்னவர்கோபால் சின்னைய செட்டி
தொகுதிவடக்கு மும்பை
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
1996-2006
தொகுதிமகாராட்டிரம்
மும்பை காங்கிரசு கட்சியின் தலைவர்
பதவியில்
15 ஜனவரி 2015 - 25 மார்ச் 2019
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு6 பெப்ரவரி 1965 (1965-02-06) (அகவை 59)[1]
ரோத்தாஸ், பீகார், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பிற அரசியல்
தொடர்புகள்
சிவ சேனா
வாழிடம்(s)மும்பை, மகாராட்டிரம், இந்தியா
இணையத்தளம்sanjaynirupam.com

சஞ்சய் நிருபம் (Sanjay Nirupam) (பிறப்பு 6 பிப்ரவரி 1965) இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் உறுப்பினரும் மற்றும் மும்பை பிராந்திய காங்கிரசு கட்சியின் முன்னாள் தலைவரும் ஆவார். [2] நிருபம் மாநிலங்களவையில் முதலில் சிவ சேனா கட்சி சார்பிலும் பின்னர் காங்கிரசு கட்சியிலிருந்தும் இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். [3] இவர் 2009 முதல் 2014 வரை வடக்கு மும்பை மக்களவைத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார் [4]

தொழில்[தொகு]

சஞ்சய், பொதுக் கணக்குக் குழு மற்றும் நிதிக் குழு போன்ற நாடாளுமன்றக் குழுக்களில் உறுப்பினராக இருந்தார். நாடாளுமன்றத்தில் காங்கிரசு கட்சிக்கான 2013-14 வரவு செலவு அறிக்கையின் விவாதத்தைத் தொடங்கி வைத்தார். கட்சியின் செயலாளராகவும், பீகார் மாநிலத்தின் செயலாளராகவும் இருந்தார். தொலைக்காட்சி நேரடி விவாதங்களில் பங்கு பெறும் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராகவும் இருந்தார். 2014 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் கோபால் ஷெட்டியிடம் சஞ்சய் நிருபம் தோல்வியடைந்தார். இவர் 2015 இல் மும்பை பிராந்திய காங்கிரசு கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். 2008ல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராகவும் இருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. SANJAY BRIJKISHORLAL NIRUPAM (Indian National Congress(INC)): Constituency – Mumbai North (MAHARASHTRA) utaar mumbai ke saansad the– Affidavit Information of Candidate:. Myneta.info (17 August 1996). Retrieved on 2016-01-24.
  2. "Ashok Chavan appointed Maharashtra Congress chief, Nirupam to lead Mumbai unit". 3 March 2015. http://www.business-standard.com/article/politics/ashok-chavan-appointed-maharashtra-congress-chief-nirupam-to-lead-mumbai-unit-115030200443_1.html. 
  3. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). மாநிலங்களவை. பார்க்கப்பட்ட நாள் 27 April 2018.
  4. "Mumbai North: Cong's Sanjay Nirupam could face tough contest - Firstpost". Firstpost (in அமெரிக்க ஆங்கிலம்). 30 March 2014. பார்க்கப்பட்ட நாள் 2016-03-09.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சஞ்சய்_நிருபம்&oldid=3918027" இலிருந்து மீள்விக்கப்பட்டது