சசனா விராட்டமா, யோக்யகர்த்தா
Sasana Wiratama | |
Location in Yogyakarta | |
அமைவிடம் | ஜலான் எச்ஓஎஸ் கோக்ரேமினோடோ டிஆர் III/430, யோக்யகர்த்தா 55244, இந்தோனேசியா |
---|---|
ஆள்கூற்று | 7°47′14″S 110°21′05″E / 7.78713°S 110.351395°E |
சசனா விராட்டமா (Sasana Wiratama) என்பது இந்தோனேஷியாவில் யோக்யகர்த்தாவில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும். இது மோனுமென் பாங்கெரான் அருங்காட்சியகம் (Diponegoro Monument Museum) என்றும் அழைக்கப்படுகிறது. டிபோனெகோராவின் நினைவுச்சின்னமாக இந்த அருங்காட்சியக வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் ஒரு அருங்காட்சியகம் மற்றும் ஒரு நினைவுச்சின்னம் ஆகியவை உள்ளன, இது 18 ஆம் நூற்றாண்டின் ஜாவானிய இளவரசர் மற்றும் ஒரு தேசிய வீராங்கனையாகவும் இருந்த இளவரசர் டிபோனெகோரோவின் போராட்டத்தை நினைவுகூறும் வகையில் அமைந்துள்ளது.
வரலாறு
[தொகு]அருங்காட்சியகம் அமைந்துள்ள கட்டட அரங்கானது டிபோனெகோராவின் வாரிசுகள் மூலாக யோக்யாகர்த்தா அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது ஆகும். அந்த வாரிசு ராடென் அயு காஞ்சங்டெங் டிபோனெகோரா ஆவார். நியி ஹட்ஜார் தேவந்தரா மற்றும் காஞ்சங் ராடென் தும்மெங்கங் யூர்ஜோடிங்கிராட் ஆகியோருடன் ஒரு இட மாற்ற ஒப்பந்தம் கையொப்பம் ஆன பின்பாக இது ஒரு செயல்பாடு நினைவுச் சின்னமாக இயங்க ஆரம்பித்தது.1968 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து 1969 ஆகஸ்ட் 19 ஆம் நாள் வரை, வளாகத்தின் மையத்தில் அமைந்துள்ள பெண்டோபோ எனப்படுகின்ற ஜாவானிய கட்டடப்பாணியில் அமைந்திருந்த கட்டடத்தை அடுத்து அமைந்திருந்த பிரிங்கிஜிட்டன் கட்டிடத்தில் ஒரு நினைவுச்சின்னம் கட்டி முடிக்கப்பட்டது. இந்தக் கட்டடத்திற்கான ஒரு திட்டத்தை இராணுவ மாவட்ட தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சுரோனோ ஆரம்பித்து வைத்தார். பின்னர் இந்தக் கட்டடத்தை ஜனாதிபதி சுஹார்டோ திறந்து வைத்தார். இந்த இடத்திற்கு பின்னர் சசனா விராட்டாமா என்று பெயரிடப்பட்டது. சசனா விராட்டமா என்ற அந்த ஜாவானிய சொல்லுக்கு "படையினருக்கான இடம்" என்பது பொருளாகும்.[1]
சேகரிப்புகள்
[தொகு]பாங்கெரான் டிபோனெகோரா நினைவுச்சின்னம் ஒரு 20 மீட்டர் நீண்ட மற்றும் 4 மீட்டர் உயர் சுவரில் அமைந்த ஒரு புடைப்புச் சிற்பம் ஆகும். ஒரு அமைதியான டெகல்ரேஜோ கிராமத்தைப் பற்றிய கதையாக இது அமைந்துள்ளது. டிபோனெகோராமற்றும் டச்சு காலனிக்கு இடையே நடைபெற்ற ஒரு போரைப் பற்றியதாக அது உள்ளது. அந்தப் போரானதுமகலாங் என்னும் இடத்தைக் கைப்பற்றும் வரை நடந்தகொண்டிருந்தது. இந்த நினைவுச்சின்னத்தின் இரு புறங்களிலும் சுய படம் மற்றும் ஓவியம் உள்ளன. அவை மேற்குப் பக்கத்தில் பங்கெரன் டிபோனெகோராவின் சுய உருவப்படம் என்ற நிலையிலும், கிழக்குப் பக்கத்தில், போரை நடத்த ஆயத்தம் ஆகின்ற நிலையில் தயாராக உள்ள தன் கருப்பு குதிரையில் சவாரி செய்யும் வகையில் அமைந்த பாங்கெரான் டிபோனெகோராவின் ஓவியம் என்ற நிலையிலும் அமைந்துள்ளன.[1]
இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள பல பொருள்களில் டிபோனெகோராவின் பொருள்கள் உட்பட அனைத்தும் அமையும். அவற்றில் டிபோனெகோராவின் இடிக்கப்பட்ட வீட்டின் பகுதிகள், பாடசான் எனப்படுகின்ற ஒரு வகையான முஸ்லீம் சடங்கினை நடத்துவதற்கான ஒரு இடம், மற்றும் கொம்போரான் எனப்படுகின்ற டிபோனெகோராவின் குதிரைக்கு நீர் மற்றும் உணவினை சேகரித்து வைக்கின்ற கல்லால் அமைந்த ஒரு கொள்கலன் போன்றவை அமைந்துள்ளன. மேலும், டிபோனெகோரா மாகெலாங்கில் வைத்திருந்த (ஒரு குர்ஆன், கிண்ணம் மற்றும் பானை, ஒரு அங்கி, நான்கு மேசைகள் மற்றும் ஒரு நாற்காலி உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஜகார்த்தாவில் உள்ள இந்தோனேசியாவின் தேசிய அருங்காட்சியகத்தில் ஒரு குதிரை சேணம் மற்றும் ஒரு லான்ஸ் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. டிபோனெகோராவின் ஒரு கிரிஸ் கத்தி நெதர்லாந்தில் இன்னும் காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.[1]
HOS கொக்ரோமினோடோ தெருவில் அமைந்துள்ள கட்டிடத்தின்பாக முன் லெப்டினன்ட் ஜெனரல் ஓரிப் சோமோஹார்ட்ஜோ என்பவரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது அதன் கிழக்குப் பக்கத்தில் "ஆர்டே கண்ட்ரே ஆர்டே தேசோர்ட்ரே" என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது . மேற்குப் பக்கத்தில் ஜெனரல் சுதிர்மனின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு இந்தோனேசிய மொழி்யில் கவனக்குறைவாக இருக்காதீர்கள் என்று பொருள்படும் வகையில் "ஜங்கன் லெங்கா" என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலைகள் இந்தோனேசிய மக்கள் தம்முடைய சுதந்திரத்திற்காக போராடிய இடத்தைக் குறிக்கிறது.[1]
வாயிலைக் கடந்து உள்ளே சென்றபின், ஒரு மசூதியின் குவிமாடத்தை ஒத்த இரண்டு மீட்டர் உயரத்தைக் கொண்டு அமைந்துள்ள ஒரு சுவர் உள்ளது, அதன் மேல் பகுதியில் ஒரு டிராகனை எதிர்க்கும் ஒரு மாபெரும் உருவத்தின் படம் உள்ளது. அந்தப் படம் ஒரு செங்கலன் மீமெட்டைக் குறிக்கும். அது ஜாவானிய எழுத்துக்களில் புத்தோ மெக்ஸோ பாசுகி நிங் பாவோனோ, என்றவாறு அமைந்தது ஆகும். அது 1825 ஆம் ஆண்டின் ஜாவானிய ஆண்டைக் குறிக்கிறது. அந்த ஆண்டு டிபோனெகோரா போரின் தொடக்கத்தைக் குறிப்பதாகும்.[1]
டிபோனெகோரா அருங்காட்சியகத்தின் சேகரிப்பாக 100க்கும் மேற்பட்ட பொருட்கள் உள்ளன, இதில் போர் ஆயுதங்கள், நாணயங்கள், விலைமதிப்பற்ற கல் மற்றும் வீட்டு தளவாடங்கள் வரையிலான டிபோனெகோரோ துணை ராணுவப் படையினர் பயன்படுத்தி வந்த பொருட்கள் உள்ளன.
இந்த அருங்காட்சியகத்தில் சேகரித்து பாதுகாக்கப்படுகின்ற பொருள்களில் இரண்டு புனிதமான ஆயுதங்கள் அடங்கும். அதில் ஒன்று 21 வளைவுகளைக் கொண்ட க்யாய் ஒம்யாங்க் என்று பெயர் சூட்டப்பட்ட ஒரு வகைக்கத்தியாகும். அது கிரிஸ் தயாரிப்பாளரால் உருவாக்கப்பட்டதாகும். மயாபாகித்து பேரரசு காலத்தைச் சேர்ந்தவர் அவர். மற்றொரு கத்தி டென்மார்க் இராச்சியத்தைச் சேர்ந்ததாகும். இந்த இரண்டு புனித ஆயுதங்களும் பேரழிவுகளைத் தடுக்கும் சக்தியினைக் கொண்டவை என்று நம்பப்படுகிறது.[1]
விநாயகர் ஒரு சிறிய சிலை, குதிரைகளின் சரிகை, ஹமெங்க்குபுவோனோ VIII வழங்கிய வண்டியை இழுக்கும், இரண்டு லோரோ ப்ளோனியோ (பீடம் / அடித்தளம்) சிலைகள் மற்றும் ஒரு ஜோடி அலங்கார விளக்குகள் உள்ளன. 1752 ஆம் ஆண்டில் மரம், தாமிரம் மற்றும் பித்தளை ஆகியவற்றால் செய்யப்பட்ட ஒரு தாள மற்றும் விலாஹான் போனாங் வடிவங்களில் தயாரிக்கப்பட்ட ஹமெங்க்குபுவோனோ II க்கு சொந்தமான கேமலான் (ஜாவானீஸ் இசைக்கருவி) சில பகுதிகள் உள்ளன. மண்டபத்தின் கிழக்கில் ஒரு பீரங்கியும் உள்ளது.[1]