சங்கர் வாமன் தாண்டேகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்கர் வாமன் தாண்டேகர் (Shankar Vaman Dandekar) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தத்துவஞானியும் கல்வியாளருமாவார். சோனோபந்து தண்டேகர் என்றும் அழைக்கப்பட்ட இவர் 1896 ஆம் ஆண்டு பிறந்தார்.[1]

மகாராட்டிர மாநிலத்தை மையமாகக் கொண்ட வர்க்காரி என்ற வைணவ பக்தி இயக்க வாழ்க்கை முறையை முன்னெடுத்தவர்களில் இவர் முக்கியமானவராக இருந்தார்.[2] சங்கர் வாமன் தாண்டேகர் புனேவில் உள்ள சர் பரசுராம்பாவ் கல்லூரியின் தத்துவப் பேராசிரியராகவும், முதல்வராகவும் பல ஆண்டுகள் பணியாற்றினார்.[3]

சங்கர் வாமன் தாண்டேகர் சமசுகிருதம் மற்றும் மராத்தி மொழிகளில் பல இந்து மத நூல்களைத் திருத்தி வெளியிட்டார்.[4][5]

சங்கர் வாமன் தாண்டேகர் 1968 ஆம் ஆண்டு காலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கர்_வாமன்_தாண்டேகர்&oldid=3775331" இலிருந்து மீள்விக்கப்பட்டது