சங்கர் வாமன் தாண்டேகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்கர் வாமன் தாண்டேகர் (Shankar Vaman Dandekar) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தத்துவஞானியும் கல்வியாளருமாவார். சோனோபந்து தண்டேகர் என்றும் அழைக்கப்பட்ட இவர் 1896 ஆம் ஆண்டு பிறந்தார்.[1]

மகாராட்டிர மாநிலத்தை மையமாகக் கொண்ட வர்க்காரி என்ற வைணவ பக்தி இயக்க வாழ்க்கை முறையை முன்னெடுத்தவர்களில் இவர் முக்கியமானவராக இருந்தார்.[2] சங்கர் வாமன் தாண்டேகர் புனேவில் உள்ள சர் பரசுராம்பாவ் கல்லூரியின் தத்துவப் பேராசிரியராகவும், முதல்வராகவும் பல ஆண்டுகள் பணியாற்றினார்.[3]

சங்கர் வாமன் தாண்டேகர் சமசுகிருதம் மற்றும் மராத்தி மொழிகளில் பல இந்து மத நூல்களைத் திருத்தி வெளியிட்டார்.[4][5]

சங்கர் வாமன் தாண்டேகர் 1968 ஆம் ஆண்டு காலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Das, G. K.; Beer, John (1979-06-17). E. M. Forster: A Human Exploration: Centenary Essays (in ஆங்கிலம்). Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781349043590.
  2. Mokashi, Digambar Balkrishna (1987). Palkhi: An Indian Pilgrimage (in ஆங்கிலம்). SUNY Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780887064616.
  3. Harrisson, Tom; Mass-Observation (1976). Living Through the Blitz (in ஆங்கிலம்). Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780002160094.
  4. Deshpande, Manohar Srinivas (1963). Dr. Ranade's life of light (in ஆங்கிலம்). Bharatiya Vidya Bhavan.
  5. Cultural News from India (in ஆங்கிலம்). Indian Council for Cultural Relations. 1968.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கர்_வாமன்_தாண்டேகர்&oldid=3775331" இலிருந்து மீள்விக்கப்பட்டது