உள்ளடக்கத்துக்குச் செல்

சகுந்தலா வசிஷ்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சகுந்தலா வசிஷ்டா (Shakuntala Vashishta) என்பவர் இந்தியக் காவல்துறையில் முதல் பெண் காவலரும் பின்னர் 1969-ல் காவல்துறை துணைக் கண்காணிப்பாளராகப் பதவி வகித்தவரும் ஆவார்.

கல்வி

[தொகு]

வசிஷ்டர் முதுகலை மற்றும் இளங்கலைச் சட்டம் பட்டம் பெற்றார்.

தொழில்

[தொகு]

வசிஷ்டா பஞ்சாப் காவல்துறையில் ஆய்வாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[1] இவர் 1966-ல் துணைக் கண்காணிப்பாளர் ஆவதற்கு முன்பு 17 ஆண்டுகள் காவல் ஆய்வாளராகப் பணியாற்றினார்.[2] 1969-ல் தில்லி காவல்துறையில் துணைக் கண்காணிப்பாளரானார்.[3] தில்லி ஆயுதப்படையின் 9வது படைப்பிரிவில் துணை காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த இவர் செப்டம்பர் 1984-ல் ஓய்வு பெற்றார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சகுந்தலா_வசிஷ்டா&oldid=3672133" இலிருந்து மீள்விக்கப்பட்டது