சகாரோவைட்டு
Appearance
சகாரோவைட்டு Zakharovite | |
---|---|
![]() | |
பொதுவானாவை | |
வகை | கனிமம் |
வேதி வாய்பாடு | Na4Mn5Si10O24(OH)6·6H2O |
இனங்காணல் | |
நிறம் | மஞ்சள் |
படிக அமைப்பு | முக்கோணம் |
பிளப்பு | சரியாக {0001} |
முறிவு | சங்குருவம் |
மோவின் அளவுகோல் வலிமை | 2 |
மிளிர்வு | மெழுகு,முத்துப் பொலிவு,மங்கல் |
மேற்கோள்கள் | [1] |
சகாரோவைட்டு (Zakharovite) என்பது Na4Mn5Si10O24(OH)6·6H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். சோடியம் மற்றும் மாங்கனீசின் சிலிக்கேட்டு சேர்மமான இது மஞ்சள் நிறத்தில் முத்து போன்ற பொலிவுடன் காணப்படுகிறது. வடக்கு உருசியாவின் கோலா தீபகற்பத்தில் 1982 ஆம் ஆண்டில் சகாரோவைட்டு கண்டுபிடிக்கப்பட்டது. 1902-1980 ஆம் ஆண்டு காலத்தில் வாழ்ந்த மாசுகோ புவியியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநரான எவ்கெனி எவ்கெனெவிச் சகாரோவின் பெயர் இக்கனிமத்திற்கு சூட்டப்பட்டது. பன்னாட்டு கனிமவியல் சங்கம் சகாரோவைட்டை சுருக்கமாக சாக் என்று அடையாளப்படுத்துகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Zakharovite". mindat.org. Retrieved 2021-12-17.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. https://www.cambridge.org/core/journals/mineralogical-magazine/article/imacnmnc-approved-mineral-symbols/62311F45ED37831D78603C6E6B25EE0A.