சஃபியா சுபைர்
Appearance
சஃபியா சுபைர் Shafia Zubair | |
---|---|
இராசத்தான் சட்டப் பேரவைஉறுப்பினர் | |
முன்னையவர் | கயன் தேவ் அகூச்சா |
தொகுதி | இராம்காட்டு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 19 செப்டம்பர் 1967 சிக்கந்தராபாத், தெலங்காணா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | சுபைர் கான் |
பிள்ளைகள் | 2 |
வாழிடம்(s) | அல்வார், இராசத்தான் |
வேலை | வணிகர், உழவர் |
இணையத்தளம் | rajassembly |
சஃபியா சுபைர் (Shafia Zubair) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இராசத்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் உறுப்பினராக இருந்தார். 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 31 ஆம் தேதியன்று ராம்கர், அல்வாரில் இருந்து இராசத்தான் மாநிலத்தின் சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் [1] [2] [3] 12,221 வாக்குகள் வித்தியாசத்தில் பாரதிய சனதாவின் இவரை நெருங்கிய போட்டியாளரை தோற்கடித்தார். அகில இந்திய காங்கிரசு குழு செயலாளர் சுபைர் கானின் மனைவி ஆவார். சஃபியா சுபைர் முன்பு இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து அல்வாரின் (2010-2015) மாவட்டப் பிரமுகராக இருந்தார்.