கௌவகடல் படுகொலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கெளவகடல் படுகொலை (Gawakadal massacre) இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு படுகொலை நிகழ்வாகும். இப்படுகொலை நிகழ்வு 1990 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் தியதி நடைபெற்றது. இது சிறிநகர் நகரின் கெளவகடல் பாலத்தில் வைத்து நடைபெற்ற நிகழ்வாகையால் கெளவகடல் படுகொலை என்று அழைக்கப்படுகிறது. இந்நிகழ்வில் இந்திய இராணுவப் பிரிவைச் சேர்ந்த மத்திய சேமக் காவல் படையினர் காஷ்மீர்க் கிளர்ச்சியாளர்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அவர்களைச் சுட்டதில் 50 முதல் 280 பேர் மரணமடைந்தனர்[1]. இவற்றில் துப்பாக்கிச் சூட்டிற்குப் பயந்து பாலத்திலிருந்து குதித்து இறந்தவர்களும் அடங்குவர்.

மேற்குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌவகடல்_படுகொலை&oldid=3056150" இலிருந்து மீள்விக்கப்பட்டது