கௌசலேந்திர பிரதாப் சாகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கௌசலேந்திர பிரதாப் சாகி
Kaushalendra Pratap Shahi
பீகார் சட்டப் பேரவை
பதவியில்
1967–1969
முன்னையவர்உமாசங்கர் பிரசாத்து
பின்னவர்மகாமாயா பிரசாத் சின்கா
தொகுதிமகாராச்கஞ்சு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅண். 1916
இறப்பு17 திசம்பர் 2019 (வயது 103)
அரசியல் கட்சிபிரச்சா சோசலிசக் கட்சி

கௌசலேந்திர பிரதாப் சாகி (Kaushalendra Pratap Shahi) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1916 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர் பீகார் சட்டப் பேரவையில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1967 ஆம் ஆண்டு பீகார் சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் பிரச்சா சோசலிசக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு மகராச்கஞ்சு சட்டமன்றத் தொகுதியிலிருந்து இவர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

2019 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 17 ஆம் தேதியன்று கௌசலேந்திர பிரதாப் சாகி தனது 103 ஆவது வயதில் தனது மூதாதையர் இல்லமான பகோரா கோதியில் காலமானார்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bihar Assembly Election Results in 1967". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 19 December 2019.
  2. "नहीं रहे पूर्व विधायक कौशलेंद्र शाही उर्फ बबुआजी". Dainik Jagran (in இந்தி). 19 December 2019. பார்க்கப்பட்ட நாள் 19 December 2019.
  3. "महाराजगंज के पूर्व विधायक कौशलेंद्र शाही का निधन, शोक में नहीं खुला बगौरा बाजार". Dainik Bhaskar (in இந்தி). 19 December 2019. பார்க்கப்பட்ட நாள் 19 December 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌசலேந்திர_பிரதாப்_சாகி&oldid=3844006" இலிருந்து மீள்விக்கப்பட்டது