கோ. விவேகானந்தன்
தோற்றம்
ஜி. விவேகானந்தன் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் ஆவார். இவர் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கோளியூர் என்ற ஊரில் 1921 சூன் 30-ஆம் நாள் பிறந்தவர். இவரது பெற்றோர் கோவிந்தன், லட்சுமி ஆவர். புதினம், நாடகம், கதை உள்ளிட்டவற்றை எழுதியுள்ளார். வார இதழ்களிலும், நாளிதழ்களிலும் சிறுகதைகளை எழுதியுள்ளார். கேரள அரசின் கலாச்சார வளர்ச்சித் துறையில் பணியாற்றுகிறார். திருவனந்தபுரத்தில் உள்ள வானொலி நிலையத்திலும் பணியாற்றுகிறார். இவரது மனைவி லலிதா. இவர்களுக்கு இரண்டு மக்கள் உள்ளனர். மலையாளத்தில் வெளியான கள்ளிச்செல்லம்மா என்ற திரைப்படத்திற்கு கதையும், வசனமும் எழுதினார்.
1986 ஆம் ஆண்டு இவருக்கு கேரள சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது.[1]
ஆக்கங்கள்
[தொகு]- சுருதிபங்கம்
- போக்குவெயில்
- வார்ட் நம்பர் 7
- கள்ளிச்செல்லம்மா
- அம்மா
- யட்சிப்பறம்பு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ജി വിവേകാനന്ദൻ: ശ്രുതിഭംഗങ്ങളുടെ കഥാകാരൻ". Janayugom Online (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-02-19. Retrieved 2023-07-11.