கோவை கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில் என்பது திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்தில் உள்ள் கொழுமம் என்ற ஊரில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலாகும்.[1] கருவறையில் உள்ள மாரியம்மன் லிங்கவடிவில் உள்ளார். இவரை சுயம்பு மாரியம்மன் என அழைக்கின்றனர்.

பெயர்க்காரணம்[தொகு]

இந்தக்கோயில் உயரமான இடத்தில் கோட்டை போல இருப்பதால் கோட்டை மாரியம்மன் என்று‌ அம்மன் அழைக்கப்படுகிறார்.

குமண மன்னர் ஆட்சி செய்ததால் குமணன் நகர் எனவும், வணிகக்குழுக்கள் அதிகம் குழுமியிருந்த இடமாகக் காணப்பட்டதால் குழுமூர் எனவும் இவ்வூர் அழைக்கப்பட்டது. அது பின்னர் கொழுமம் என்றானதாகக் கூறுவர்.[2]

தலவரலாறு[தொகு]

அமராவதி ஆற்றில் மீனவர் ஒருவர் மீன் பிடிக்க வலைவீசியபோது லிங்க வடிவ கல் ஒன்று சிக்கியதாகவும், அதனை கரையில் வீசிவிட்டு மீண்டும் வலையை வீசும் போதும் அதேகல் கிடைத்தது. அந்த மீனவர் கனவில் அம்மன் லிங்க வடிவில் வந்தது தானென கூறினார்.

மீனவர் இத்தகவலை ஊர் மக்களிடம் கூறினார். அந்த லிங்கத்தை தேடி மக்கள் கோயில் கட்டினர் என தலபுராணம் கூறுகிறது.

நேர்த்திக்கடன்கள்[தொகு]

  • அக்னிசட்டி
  • அங்கப்பிரதட்சணம்
  • பால்குடம்
  • முடிக்காணிக்கை

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mariamman Temple : Mariamman Mariamman Temple Details | Mariamman- Kozhumam | Tamilnadu Temple | மாரியம்மன்". temple.dinamalar.com.
  2. "Thandeswarar Temple : Thandeswarar Thandeswarar Temple Details | Thandeswarar - Kozhumam | Tamilnadu Temple | தாண்டேஸ்வரர்". temple.dinamalar.com.

வெளி இணைப்புகள்[தொகு]

Kolumam (Kozhumam) Kottai Mariamman Temple, Madathukulam - கொழுமம், கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா