கோவிந்த் சரண் லோக்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோவிந்த் சரண் லோக்ரா
பிறப்புகோவிந்த் சரண் லோக்ரா
இட்டா பராகி, லோஹர்தக்கா, பீகார் ( தற்போதைய சார்க்கண்டு), இந்தியா
பணிநாட்டுப்புற பாடகர், பாடலாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1992–தற்போது வரை
அறியப்படுவதுநாக்புரி நாட்டுப்புற இசை
விருதுகள்
  • அக்ருதி சம்மான் (2002)
  • பீட்டர் நௌரங்கி சாகித்திய சம்மான் (2010)
  • சார்க்கண்டு பிபூதி விருது (2012)
  • ஜெய்சங்கர் பிரசாத் சுமிருதி விருது (2021)

கோவிந்த் சரண் லோக்ரா (Govind Sharan Lohra) ஒரு இந்திய நாட்டுப்புறக் கலைஞராவார். இவர் நாக்புரி நாட்டுப்புற பாடகரும், பாடலாசிரியரும், நடனக் கலைஞரும் ஆவார். இவர் பல தேசிய நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார். அக்ருதி சம்மான், பீட்டர் நௌரங்கி சாகித்ய சம்மான் மற்றும் சார்க்கண்டு பிபூதி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.[1][2] இவருக்கு 2021 இல் ஜெய்சங்கர் பிரசாத் சுமிருதி விருது வழங்கப்பட்டது. [3]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

லோஹர்தக்கா மாவட்டத்திலுள்ள இட்டா என்ற கிராமத்தில் லோஹ்ரா சமூகத்தில் பிறந்தார்.[4] நாக்புரி பாடல் எழுதுதல், பாடுதல், இசைக்கருவிகள் வாசித்தல் மற்றும் நடனம் ஆகிய துறைகளில் நன்கு தேர்ச்சி பெற்றவர்.[1]

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் ராஸ்திரிய ஜன்ஜாதிய சம்மேளனம் (1992), ராஜஸ்தானின் சித்தோர்கரில் ராஸ்த்ரிய ஏக்தா சிபிர் (1994), பாட்னாவில் தேசிய நாட்டுப்புற இசை நிகழ்வு (1996), பீகாரில் சோட்டாநாக்பூர் மகோத்சவம் (1999) பாரதிய விவசாயிகளின் சங்கத்தின் தேசிய நிகழ்வு (2000), உத்தரப் பிரதேசத்தின் ஹஸ்தினாபூர், ராஞ்சியில் 4வது வனவாசி கிரிடா மகோத்சவம் (2000) போன்ற பல தேசிய நிகழ்வுகளில் இவர் நிகழ்த்தினார்.[1]

தற்போது, நாக்புரி நாட்டுப்புற இசை பற்றி ராஞ்சி பல்கலைக்கழகத்தின் பிராந்திய மொழித் துறையில் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுகிறார். முதுமையில் இவருக்கு பக்கவாதம் வந்தாலும் அடுத்த தலைமுறைக்கு தனது அறிவை வழங்க வேண்டும் என்று விரும்புகிறார். நவீனமயமாக்கல் என்ற பெயரில் நாட்டுப்புற இசையை சிதைக்க வேண்டாம் என்று இவர் இளைஞர்களுக்கு அறிவுறுத்துகிறார்.[1]

அக்ருதி சம்மான் (2002), பீட்டர் நௌரங்கி சாகித்ய சம்மான் (2010) மற்றும் ஜார்கண்ட் பிபூதி (2012) உள்ளிட்ட பல விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. யூத் ஹாஸ்டல் ஆஃப் இந்தியா, புது தில்லி (1992), பீகார் அரசு (1996), சுர் தரங்கி சம்மாஜிக் ஏவம் சம்ஸ்கிருதிக் சன்ஸ்தா, பாட்னா ஆகியவற்றிலிருந்தும் பல சான்றிதழைப் பெற்றார்.[1] இவருக்கு 2021 இல் ஜெய்சங்கர் பிரசாத் சுமிருதி விருது வழங்கப்பட்டது..[5]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "ठेठ नागपुरी गीत-नृत्य के पुरोधा गोविंद शरण लोहरा". prabhatkhabar. 20 September 2019. பார்க்கப்பட்ட நாள் 2 April 2022.
  2. "कोरोना के खिलाफ लोक गायक गोविंद शरण की अनोखी जंग, नागपुरी गीत से लोगों को कर रहे जागरुक". etvbharat. 30 March 2020. பார்க்கப்பட்ட நாள் 2 April 2022.
  3. "जयशंकर प्रसाद स्मृति समारोह में बीएसएनएल ने कई साहित्यकारों को किया सम्मानित". bhaskar. January 2021.
  4. "लोहरा समाज के 150 लोगों को किया गया सम्मानित". livehindustan. 28 February 2021. https://www.livehindustan.com/jharkhand/ranchi/story-150-people-of-lohra-society-honored-3881958.html. 
  5. "नरेश अग्रवाल और नीरज नीर को जयशंकर प्रसाद स्मृति सम्मान". livehindustan. 31 January 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவிந்த்_சரண்_லோக்ரா&oldid=3664897" இலிருந்து மீள்விக்கப்பட்டது