உள்ளடக்கத்துக்குச் செல்

கோழிக்குத்தி வானமுட்டிப் பெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வானமுட்டிப்பெருமாள் கோயில் ராஜகோபுரம்

கோழிக்குத்தி வானமுட்டிப் பெருமாள் கோயில் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அமைந்துள்ள வைணவக்கோயிலாகும்.

அமைவிடம்

[தொகு]

இக்கோயில் மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் அமைந்துள்ள மூவலூரிலிருந்து 2 கிமீ புறவழிச்சாலையில் 5 கிமீ தொலைவில் கோழிக்குத்தி அமைந்துள்ளது. சோழன்பேட்டை கிராமத்தில் அமைந்த கோடிஹித்தி பாப விமோசனபுரமே கோழிக்குத்தி என்று தற்போது அழைக்கப்படுகிறது.[1]

இறைவன், இறைவி

[தொகு]

14 அடி உயரத்தில் அத்தி மரத்தில் வடிக்கப்பட்டு மூலிகை நிறம் தீட்டப்பட்டு கிழக்கு நோக்கிய நிலையில் இறைவன் உள்ளார். பக்தப்ரியன் என்ற பெயரில் இப்பெருமாள் தயாலட்சுமி, பூமிதேவியோடு உள்ளார். [1] கோயிலின் தீர்த்தம் பிப்பல மகரிஷி தீர்த்தம் ஆகும். [2]

பிற சன்னதிகள்

[தொகு]

இக்கோயிலில் வரதராஜப்பெருமாள், யோக நரசிம்மர், சக்கரத்தாழ்வார், நர்த்தன கிருஷ்ணர், கருடாழ்வார், சப்தசொரூப ஆஞ்சநேயர், விஷ்வக்சேனர், ராமானுஜர், பிப்பல மகரிஷி ஆகியோருக்கான சன்னதிகள் காணப்படுகின்றன. [1] இங்குள்ள ஆஞ்சநேயரை சப்தஸ்வர ஆஞ்சநேயர் என்றழைக்கின்றனர். இச்சிலையில் தட்டினால் ஏழு இடங்களில் ஓசை வருகிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014
  2. 2.0 2.1 அருள்மிகு வான்முட்டி பெருமாள் திருக்கோயில், தினமலர் கோயில்கள்

இவற்றையும் காண்க

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]