கோள்காரர்
கோள்காரன், காக்கிலுவாடன் அல்லது இறப்புத் தூதர்கள் (death messenger) என்பவர்கள் முற்காலங்களில் தங்கள் நகரத்தில் அல்லது கிராமத்தில் வசித்தவர் ஒருவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை பரப்புவதற்காக அனுப்பப்பட்டவர்கள். அவர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று கதவைத் தட்டி, "நீங்கள் இறந்தவர்களின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறீா்கள் __________ (நேரம், தேதி, இடம்)" என்ற செய்தியை கூறுவார்கள். இதைத் தான் அவர்கள் சொல்ல அனுமதிக்கப்பட்டனர்.[1] இந்த அறிவிப்பு கூறியவுடன் உடனடியாக அடுத்த வீட்டிற்கு செல்ல வேண்டும். இந்த மரபு 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வரை சில பகுதிகளில் தொடர்ந்து இருந்தது.
வடதமிழகத்தின் சிலபகுதிகளில் இவர்களை தோள்காரன் என அழைப்பது வழக்கம். இவர்கள் தமிழகத்தில் தொலைபேசி வசதிகள் இல்லாத இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை இருந்தனர். இவர்களை கிராமத்தில் இந்த வேலையை பகுதி நேரமாக செய்வர். யாராவது இறந்துவிட்டால் அவர்களின் உறவினர் வீடுகளுக்குச் சென்று இன்னார் இறந்துவிட்டார் என்ற தகவலைத் தெரிவிப்பார். கோள்காரருக்கு ஆண்டுக்கு ஒரு முறை ஒவ்வொரு வீட்டாரும் தாணியத்தைக் கூலியாக அளிப்பர். கோள் என்ற சொல் சொல்லுதல் (பிறரைப்பற்றி) என்று பொருள் உண்டு.[2] எனவே தகவல்களை சொல்லுபவரைக் கோள்காரர் என அழைத்தனர்.
தமிழகத்தின் சில பகுதிகளில் இவர்களை காக்கிலுவாடன் என்று அழைக்கின்றனர். இவர்களிடம் யார் இறந்தது? அவர் யாரின் உறவினர் போன்ற விவரங்களை எழுதி தருவர். அந்தக் கடிதத்தில் யார்யாருக்கு இழுவு செய்தியைச் சொல்லவேண்டும், எந்த ஊருக்கு போக வேண்டும் என்பது போன்ற விவரங்கும் எழுதி தரப்படும். கடிதத்தை உறவினர்களிடம் காட்டி, அதில் எத்தனை மணிக்கு செய்தி வந்து சேர்நது என்ற விவரத்தை எழுதி கையொப்பம் பெற்று வரச் சொல்லுவார்கள். செலவுக்கு கொஞ்சம் பணத்தையும் கொடுத்து அனுப்புவார்கள்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Swenna Harger & Loren Lemmen, The County of Bentheim and her Emigrants to North America, 4th edition (Holland, MI: Swenna Harger, 1994), p. 7.
- ↑ https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D
- ↑ எழவு சொல்லிகள், கட்டுரை, இராமா, பக்கம் 36- 39 குமுதம் (இதழ்) பொங்கல் சிறப்பிதழ் 13 சனவரி 2003,