கோல்டா மேயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோல்டா மேயர்
גולדה מאיר
Golda Meir 03265u.jpg
நான்காவது இசுரேலின் பிரதம மந்திரி
பதவியில்
17 மார்ச் 1969 – 3 சூன் 1974
குடியரசுத் தலைவர் சல்மான் சாசர்
எபிரைம் காட்சிர்
முன்னவர் யிகல் அல்லான் (பதில்)
பின்வந்தவர் இட்சாக் ரபீன்
வெளிநாட்டு அமைச்சர்
பதவியில்
18 சூன் 1956 – 12 சனவரி 1966
பிரதமர் டேவிட் பென்-குரியன்
லெவி எசுக்கோல்
முன்னவர் மோசே சாரெட்
பின்வந்தவர் அப்பா எபான்
தனிநபர் தகவல்
பிறப்பு மே 3, 1898(1898-05-03)
கீவ், உருசியப் பேரரசு
இறப்பு 8 திசம்பர் 1978(1978-12-08) (அகவை 80)
யெரூசலம், இசுரேல்
அரசியல் கட்சி Alignment
Mapai
தொழிற் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) மொரிசு மேயர்சன் (1917–1951)
படித்த கல்வி நிறுவனங்கள் மில்வோக்கி விசுக்கோன்சின் அரசுக் கல்லூரி இப்போது விசுக்கோன்சின்-மில்வோக்கி பல்கலைக்கழகம்
சமயம் யூதம்

கோல்டா மபோவிச் (Golda Meir, மே 3, 1898டிசம்பர் 8, 1978) என்னும் இயற்பெயர் கொண்டவரும், 1917க்கும் 1956 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் கோல்டா மேயர்சன் என அறியப்பட்டவருமான கோல்டா மேயர் இசுரேலின் நான்காவது பிரதம மந்திரி ஆவார். தொழில் அமைச்சராகவும், வெளிநாட்டு அமைச்சராகவும் பணியாற்றிய பின்னர் 1969 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் தேதி இசுரேலின் பிரதம மந்திரியாகத் தெரிவு செய்யப்பட்டார். இசுரேலில் பிரதம மந்திரி பதவிக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதல் பெண் இவர். உலகில் இவ்வாறான பதவி வகித்த பெண்களில் மூன்றாவது இடத்தில் இவர் உள்ளார். இங்கிலாந்தில் பிரதமராக இருந்த மார்கரெட் தாட்சர் "இரும்புப் பெண்" என அழைக்கப்படுவதற்குப் பல வருடங்களுக்கு முன்பே இசுரேல் அரசியலில் "இரும்புப் பெண்" என இவர் அழைக்கப்பட்டார். இசுரேலின் முன்னாள் பிரதமர் டேவிட் பென்-குரியன் இவரை "அரசின் மிகச் சிறந்த ஆண்" எனக் குறிப்பிட்டார். வலிமையான மன உறுதியும், நேரடியாகப் பேசும் பழக்கமும் கொண்ட இவரை யூத மக்களின் பாட்டி என்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோல்டா_மேயர்&oldid=3170405" இருந்து மீள்விக்கப்பட்டது