கோலகாட் அனல் மின் நிலையம்

ஆள்கூறுகள்: 22°24′56″N 87°52′12″E / 22.41556°N 87.87000°E / 22.41556; 87.87000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோலகாட் அனல் மின் நிலையம்
Kolaghat Thermal Power Station
நாடுஇந்தியா
அமைவு22°24′56″N 87°52′12″E / 22.41556°N 87.87000°E / 22.41556; 87.87000
நிலைஇயங்குகிறது
இயங்கத் துவங்கிய தேதி1984
இயக்குபவர்மேற்கு வங்காள ஆற்றல் மேம்பாட்டு ஆணையம்

கோலகாட் அனல் மின் நிலையம் (Kolaghat Thermal Power Station) இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்திலுள்ள முக்கியமான மின் உற்பத்தி நிலையமாகும். கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் கொல்கத்தா நகரத்திலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மெக்கேதா நகரத்தில் அமைந்துள்ளது. மேற்கு வங்காள ஆற்றல் மேம்பாட்டு ஆணையம் இந்த அனல் மின் நிலையத்தை பராமரிக்கிறது.

210 மெகாவாட்டு சக்தி கொண்ட ஆறு அலகுகள் கோலகாட் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்கின்றன. இங்கிருந்து மொத்தமாக 1260 மெகாவாட் மின்சாரம் மாநிலத்திற்கு கிடைக்கிறது. 1984 மற்றும் 1995 ஆம் ஆண்டுகளுக்கிடையில் இரன்டு நிலைகளாக ஆறு அலகுகளும் இங்கு நிறுவப்பட்டன.

நிறுவப்பட்ட திறன்[தொகு]

ஆறு அலகுகளின் நிறுவப்பட்ட மின்னாற்றல் திறன் அளவுகள் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.[1]

நிலை அலகு எண் மின்னாற்றல் திறன்
(மெகா வாட்டு)
நிறுவப்பட்ட நாள் இயங்குந் தன்மை
I 1 210 செப்டம்பர் 1990 இயங்குகிறது
I 2 210 மார்ச்சு 1986 இயங்குகிறது
I 3 210 அக்டோபர் 1984 இயங்குகிறது
II 4 210 ஏப்ரல் 1995 இயங்குகிறது
II 5 210 மே 1991 இயங்குகிறது
II 6 210 சனவரி 1994 இயங்குகிறது

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kolaghat Thermal Power Station". Archived from the original on 2015-02-06. பார்க்கப்பட்ட நாள் 2020-12-25.