கோர்மனைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோர்மனைட்டு
Gormanite
பிரேசில் நாட்டில் காணப்பட்ட கோர்மனைட்டு கனிமம் (அளவு: 4.2 × 4.2 × 3.0 செ.மீ)
பொதுவானாவை
வகைபாசுபேட்டு கனிமம்
வேதி வாய்பாடு(Fe,Mg)3Al4(PO4)4(OH)6·2H2O
இனங்காணல்
நிறம்நீலப் பச்சை
படிக இயல்புஊசிப்படிக திரட்சி; போலி ஒற்றைச் சரிவச்சு
படிக அமைப்புமுச்சாய்வு
இரட்டைப் படிகமுறல்பல் செயற்கை சுமார் [010]
பிளப்பு{001} தெளிவற்று
முறிவுபிளவு
விகுவுத் தன்மைஉடையும்
மோவின் அளவுகோல் வலிமை4–5
மிளிர்வுசிறு பளபளப்பு, மெழுகு மிளிர்வு
கீற்றுவண்ணம்வெளிர் பச்சை
ஒளிஊடுருவும் தன்மைபகுதியாக ஒளி ஊடுறுவும்
ஒப்படர்த்தி3.10–3.13
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (−)
ஒளிவிலகல் எண்nα = 1.619 nβ = 1.653 nγ = 1.660
இரட்டை ஒளிவிலகல்.041
பலதிசை வண்ணப்படிகமைவலிமையானது, X நிறமற்றது, Y நீலம், Z நிறமற்றது
2V கோணம்அளக்கப்பட்டது: 53°
மேற்கோள்கள்[1]

கோர்மனைட்டு (Gormanite) என்பது (Fe,Mg)3Al4(PO4)4(OH)6·2H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு பாசுபேட்டு வகை கனிமமாகும். 1922 முதல் 2020 ஆம் ஆண்டுகள் வரையிலான காலத்தில் வாழ்ந்த தொராண்டோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தொனால்டு எர்பர்ட்டு கோர்மன் நினைவாக கனிமத்திற்கு கோர்மனைட்டு என்று பெயரிடப்பட்டுள்ளது. கோர்மனைட்டை பன்னாட்டு கனிமவியல் நிறுவனம் Gm என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது[2]

தோற்றம்[தொகு]

கோர்மனைட்டு கனிமம் முதன்முதலில் 1981 ஆம் ஆண்டு கனடாவின் யூகோன் பிரதேசத்தில் உள்ள டாசன் சுரங்க மாவட்டத்தில் ரேபிட் கிரீக்கு மற்றும் பிக் பிசு நதியில் காணப்பட்டதாக விவரிக்கப்பட்டது. இவ்விடங்களில் இது இரும்பு பாசுபேட்டு கணுக்களில் இழைகளாக காணப்பட்டது.[1] பிசுபீ, அரிசோனா பகுதிகளில் இது ஒரு தோனலைட்டு பாறைப் பிளவுகளில் ஊடுருவி பெரிய படிகங்களாக இருந்தது. அமெரிக்காவின் நியூபோர்ட்டு நகரம், சல்லிவன் மாகாணம், நியூ ஆம்சையர் குரோட்டன், கிராப்டன் மாகாணம் போன்ற பகுதிகளிலும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நமீபியாவின் கரிபிப்பிற்கு தெற்கே உள்ள தீப்பாறைகளிலும் கோர்மனைட்டு கிடைப்பதாக பதிவாகியுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Handbook of Mineralogy
  2. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 

புற இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோர்மனைட்டு&oldid=3937049" இலிருந்து மீள்விக்கப்பட்டது