கோரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
3D png Judges Gavel.png

கோரம் (Quorum) சட்டப்படியான ஒரு நிறுவனத்தின் பொதுக்குழு அல்லது நிர்வாகக் குழு கூட்டங்களில், குழுவின் மொத்த உறுப்பினர்களில் ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டினர் கலந்து கொள்வதை, சட்டப்படி அல்லது அரசாணையின்படி அல்லது அந்நிறுவனத்தின் துணை விதிகளில்[1] கூறப்பட்டிருக்கும்.[2][3]

குறிப்பிட்ட தொகை உறுப்பினர்கள் கலந்து கொள்ளாத கூட்டத்தை, உடனடியாகக் கூட்டத் தலைவர் வேறு கிழமைக்கு ஒத்தி வைக்க வேண்டும். கோரம் இல்லாத கூட்டத்தில் தீர்மானங்களைக் குறித்து பேசலாம், விவாதிக்கலாம்; ஆனால் தீர்மானங்கள் நிறைவேற்றினால், அது சட்டப்படி செல்லுபடியாகாது.

எடுத்துக்காட்டாக தமிழக கிராம ஊராட்சிகள் நடத்தும் கிராம சபைக் கூட்டங்களில், கிராம ஊராட்சியின் மொத்த வாக்காளர்களில் 10% அல்லது கிராம ஊராட்சியின் மக்கள் தொகைக்கு ஏற்ப குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட வாக்காளர்கள் கலந்து கொண்டிருப்பதை ஆங்கிலத்தில் கோரம் எனப்படும்.[4]

கூட்டத்தில் கோரம் உள்ளதா அல்லது இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் நபர் கூட்டத் தலைவர் ஆவார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Procedures Used in Meetings: Quorum of Members". Internet Band Boosters International. 9 ஜூன் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 9 June 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Quorum Definition:". Duhaime.org. 7 ஏப்ரல் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 9 June 2016 அன்று பார்க்கப்பட்டது.
  3. C. Allan Jennings. "Robert's Rules for Defining a Quorum". For Dummies. John Wiley & Sons. 9 June 2016 அன்று பார்க்கப்பட்டது.
  4. Gram Panchayat
  5. "Henry M. Robert (1837–1923). Robert's Rules of Order Revised. 1915. 64 A Quorum". Bartleby.com. 9 June 2016 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோரம்&oldid=3612492" இருந்து மீள்விக்கப்பட்டது