கோரதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோரதம்

கோரதம் என்பது இந்து சமய கோயில்களில் உற்சவர் வீதியுலா செல்லும் சிறிய தேர் ஆகும். பெரிய தேர்களை உபயோகப்படுத்த வசதி இல்லாத பல கோவில்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன. [1]

இந்த சிறியவகை கோரதங்கள் தங்கத்தினாலோ அல்லது வெள்ளியினாலோ செய்யப்படுகின்றன.

கோயில்களில்[தொகு]

பெயர்க்காரணம்[தொகு]

19ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சில கிழக்கிந்திய கம்பெனி பாணி சித்திரங்களில் எண்கோண ரதத்தில் மன்னன் அமர்ந்திருப்பதையும் அதனை பசுக்கள் இழுத்துக் கொண்டு செல்வதையும் காணலாம். [1]அவ்வான தேரை முதன்மையாகஸகொண்டு சிறிய அளவில் இத்தேர்கள் உருவாக்கப்பட்டிருப்பதால் கோரதம் என்று அழைக்கப்பட்டிருக்கலாம்.

அமைப்பு[தொகு]

நான்கு சக்கரங்களும், அச்சாணிகளால் இணைக்கப்பட்டு ஒரு சதுர மர பீடத்தைத் தாங்குகின்றன. இதன் மீது சிற்பங்கள் செதுக்கப்பட்ட பல தளங்களும் அல்லது பரவலாக ஒரு தாமரையும் அதன் மேல் எண்கோணச் சதுரப் பலகையும் அமைக்கப்பட்டிருக்கும்.

இதிலிருந்து நான்கு அல்லது எட்டு தூண்கள் எழுந்து, திராவிட பாணியில் உள்ள விமானம் போன்ற அமைப்பு விதானத்தை தாங்குகின்றன.

செட்டிநாட்டுக் கோவில்கள் சிலவற்றில் உள்ள கோரதங்களில் சுட்ட மண்ணாலான பெண் பொம்மைகள் சாமரம் வீசுவது போல அமைக்கப்பட்டுள்ளன.[1]

இவற்றையும் காண்க[தொகு]

அதிகார நந்தி வாகனம்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 புத்தகம்:தமிழகக் கோயில் வாகனங்கள். ஆசிரியர்:சக்கரவர்த்தி, பிரதீப் - பக்கம் 85 ஆவண இருப்பிடம் டாக்டர் உ.வே.சா. நூலகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோரதம்&oldid=3711911" இலிருந்து மீள்விக்கப்பட்டது