கோம்பேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


கோம்பேட்டு
Kombat
சுரங்கக் குடியேற்றம்
ஆள்கூறுகள்: 19°43′S 17°43′E / 19.717°S 17.717°E / -19.717; 17.717
நாடு நமீபியா
நமீபியா மண்டலம்ஒட்யோசோன்டுயுபா மண்டலம்
Established1900
நேர வலயம்தென்னாப்பிரிக்க சீர் நேரம் (ஒசநே+2)
ClimateBSh

கோம்பேட்டு (Kombat) என்பது நமீபியா நாட்டிலுள்ள ஒர் சுரங்கம் ஆகும். இச் சுரங்கம் வடக்கு நமீபியா நகரின் ஒட்டாவி மலைத்தொடரின் தெற்கு விளிம்பில் அமைந்துள்ளது. ஒட்டாவிக்கு கிழக்கில் 37 கிலோமீட்டர் தொலைவில் தங்க நெடுஞ்சாலை எனப்படும் பி8 சாலையில் குரூட்போண்டெயின் நகரில் இச்சுரங்கம் அமைந்துள்ளது [1]. கோம்பேட் சுரங்கப் பகுதியில் அதிகபட்சமாக 1000 பேருக்கு மேல் வசித்தனர். 2015 இல் கிட்டத்தட்ட இப்பகுதி தடைசெய்யப்பட்டது. இருப்பினும் கோம்பேட் தொடக்கப்பள்ளி குறைந்த மாணவர் எண்ணிக்கையுடன் தொடர்ந்து இயங்கி வருகிறது. எஞ்சியுள்ள குடியிருப்பு மக்களுக்காக இங்கு ஒரு மருத்துவமனையும் இயங்கி வருகிறது [2].

கோம்பாட் சுரங்கத்திற்கு அருகில் கனிமங்கள் இருப்பது 1950 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 1900 ஆம் ஆண்டுகளில் தாமிரத்தைப் பிரித்தெடுப்பதற்காக கோம்பாட் சுரங்கம் தொடங்கப்பட்டது [1]. 1970 ஆம் ஆண்டுவரை திசுமெப் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இச்சுரங்கம் இயங்கியது. பின்னர் 1999 ஆம் ஆண்டு முதல் ஓங்கோபோலோ நிறுவனத்தின் கட்டுபாட்டிலும் பின்னர் 2006 முதல் இலண்டனை தலைமையிடமாகக் கொண்ட வெதர்லி இண்டர்நேசனல் பி.எல்.சி நிறுவனமும் இச்சுரங்கத்தை இயக்கின. அதன் பிறகு 2007 ஆம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தில் மூழ்கியதால் சுரங்கம் கைவிடப்பட்டு செயலற்றுப் போனது. 2015 ஆம் ஆண்டில் நபீபிய வியாபாரி ஒருவர் இலாபத்துடன் நமீபிய அரசாங்கதிற்கு திரும்பவும் விற்பனை செய்யும் நோக்கத்துடன் சுரங்கத்தை 50 மில்லியன் நமீபிய டாலர் பணத்திற்கு இச்சுரங்கத்தை வாங்கினார்.[3][2]

கோம்பேட்டு சுரங்கத்தில் கிடைத்த நம்பூலைட்டு என்ற ஓர் அரிய மணிக்கல். 0.7 x 0.6 x 0.4 செ.மீ அளவில் இம்மாதிரி உள்ளது.

தாமிரத்தை தவிர இச்சுரங்கத்தில் ஈயம் மற்றும் வெள்ளி படிவுகள் இருப்பதாக அறியப்பட்டது.[3] கிளவ்கோசோரைட்டு உள்ளிட்ட அரிய கனிமங்களின் இருப்பிடமாக கோம்பேட் சுரங்கம் கருதப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Kombat Mine, Kombat, Grootfontein District, Otjozondjupa Region, Namibia". Mineralogy Database. பார்த்த நாள் 18 October 2012.
  2. 2.0 2.1 Kahiurika, Ndankie (28 October 2015). "A ghost town called Kombat". The Namibian. http://www.namibian.com.na/index.php?page=read&id=33323. 
  3. 3.0 3.1 Neethling, Andre (5 May 2011). "What is happening at Kombat?". Namibian Sun. http://www.namibiansun.com/node/8075. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோம்பேட்டு&oldid=2761080" இருந்து மீள்விக்கப்பட்டது