உள்ளடக்கத்துக்குச் செல்

கோபுரம் தாங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Andrographis echioides

கோபுரம் தாங்கி (False Waterwillow, தாவர வகைப்பாட்டியல்: Andrographis echioides)[1] என்பது தமிழக மூலிகைச் செடிகளில் ஒன்றாகும். இது தமிழகத்தில் அழிந்து வரும் இனமாகக் கருதப்படுகிறது. பாறை இடுக்குகளிலும், இடிந்த சுவர்களிலும், பரவலாக அனைத்து தமிழகக் கிராமங்களிலும் காணப்படுகிறது. இதன் விதைப்பை நீர் பட்டவுடன் வெடித்து பரவும் தன்மைக் கொண்டதாக இருக்கிறது. இதன் இலை, வேர் என்பன பயன் தரும் பாகங்களாகும். சித்தமருத்துவத்தில் தலைப்பொடுகு, முடி உதிர்தல், தலைச்சூடு தணிப்புக்கும், தலைப் புழுவெட்டுக்கும், முடிவளர்ச்சிக்கும் பயனாகுமென குறிப்புகள் உள்ளன. சம அளவு நல்லெண்ணெயுடன் கலந்து தைலம் காய்ச்சி பயன்படுத்துவது சிறப்பாகக் கூறப்படுகிறது.

இவற்றையும் காணவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Andrographis echioides
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபுரம்_தாங்கி&oldid=3880276" இலிருந்து மீள்விக்கப்பட்டது