கோட்டுரு நிறந்தீட்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீட்டர்சன் கோட்டுருவொன்றின் முறையான "முனை நிறந்தீட்டல்". மூன்று நிறங்களைக் கொண்டது. இதுவே இயலக்கூடிய மிகக் குறைந்த எண்ணிக்கை.

கோட்டுருவியலில், கோட்டுரு நிறந்தீட்டல் அல்லது கோட்டுரு வண்ணமிடல் (Graph coloring) என்பது ஒரு சிறப்பு வகைக் கோட்டுருக் குறியிடல் ஆகும். இதைச் சில வரையறைகளுக்கு உட்பட்டுக் ட்கோடுருவொன்றின் கூறுகளுக்குப் பெயர் கொடுத்தல் எனலாம். இதன் எளிமையான வடிவமாக, அடுத்துள்ள முனைகள் ஒரே நிறத்தைக் கொண்டிராதவாறு கோட்டுருவின் முனைகளுக்கு நிறந்தீட்டுவதைக் குறிப்பிடலாம். இதை "முனை நிறந்தீட்டல்" அல்லது "முனை வண்ணமிடல்" என்பர். இவ்வாறே அடுத்துள்ள விளிம்புகள் ஒரே நிறத்தைக் கொண்டிராதவாறு கோட்டுருவின் விளிம்புகளுக்கு நிறந்தீட்டுவதை "விளிம்பு நிறந்தீட்டல்" அல்லது "விளிம்பு வண்ணமிடல்" என்றும், பொதுவான விளிம்பைக் கொண்டிருக்கும் அடுத்துள்ள முகப்புகள் ஒரே நிறத்தைக் கொண்டிராதவாறு கோட்டுருவின் முகங்களுக்கு நிறந்தீட்டுவதை "முகப்பு நிறந்தீட்டல்" அல்லது "முகப்பு வண்ணமிடல்" என்றும், கூறுவர்.

முனை நிறந்தீட்டலே இந்தத் துறையின் தொடக்கம். ஏனைய நிறந்தீட்டல் வகைகளை முனை நிறந்தீட்டலாக மாற்ற முடியும். எடுத்துக்காட்டாக, விளிம்பு நிறந்தீட்டல், அதன் வரைக் கோட்டுருவின் முனை நிறந்தீட்டலாகவும், தளக் கோட்டுரு ஒன்றின் முகப்பு நிறந்தீட்டல் அதன் இரட்டைத் தளவுருவின் முனை நிறந்தீட்டலாகவும் அமையும். எனினும், முனை நிறந்தீட்டல் அல்லாத பிற வகை நிறந்தீட்டல்களும் அவ்வவ்வடிவங்களிலேயே ஆய்வு செய்யப்படுகின்றன. ஏனெனில், சில பிரச்சினைகளுக்கு, முனை நிறந்தீட்டல் அல்லாத வகைகளை ஆராய்வது கூடிய பொருத்தமாக அமைகின்றது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்டுரு_நிறந்தீட்டல்&oldid=2971919" இலிருந்து மீள்விக்கப்பட்டது