கோட்டா வம்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோட்டா வம்சம் (Kota Vamsa) ஒரு இடைக்கால வம்சமாகும், இது நவீனகால இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் ஆட்சி செய்தது. கோட்டாக்கள் தனஞ்சய கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். கோட்டா தலைவர்கள் தரணிகோட்டையை தலைநகராகக் கொண்டு கம்மநாட்டை ஆண்டனர். கோட்டா மன்னர்கள் சூத்திர வர்ணத்தைச் சேர்ந்தவர்கள். [1] [2] இவர்கள் அரசாட்சி செய்த பிறகு, சத்திரியர்களாக அங்கீகரிக்கப்பட்டனர். [3] அவர்கள் காக்கத்தியர்களுடன் திருமணத் தொடர்பு வைத்திருந்தனர். கணபதிதேவரின் மகள் கணபமாதேவியை இரண்டாம் கோட்டா கேட்டாவின் பேரனுக்கு திருமணம் செய்து வைத்தார். [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sastry, P. V. Parabhrama (1978). N. Ramesan, ed. The Kākatiyas of Warangal. Hyderabad: Government of Andhra Pradesh
  2. The Rule Of The Chalukya Cholas In Andhrapradesa. 1978. பக். 288. https://archive.org/details/the-rule-of-the-chalukya-cholas-in-andhrapradesa/page/287/mode/2up. 
  3. The Rule Of The Chalukya Cholas In Andhrapradesa. 1978. பக். 288. https://archive.org/details/the-rule-of-the-chalukya-cholas-in-andhrapradesa/page/287/mode/2up. 
  4. Precolonial India in practice: society, region and identity in medieval Andhra. 2001. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்டா_வம்சம்&oldid=3800642" இலிருந்து மீள்விக்கப்பட்டது