கோசி ஆறு (உத்தராகண்டம்)

ஆள்கூறுகள்: 28°38′03″N 79°01′42″E / 28.63407°N 79.02825°E / 28.63407; 79.02825
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோசி ஆறு
Kosi River
Kosi River valley near Almora
அல்மோரா அருகே கோசி ஆற்றுச் சமவெளி
அமைவு
நாடு India
மாநிலம்உத்தராகண்டம், உத்தரப் பிரதேசம்
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுதரபாணி தர், கௌசானி
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
இராமகங்கை, உத்தரப் பிரதேசம், இந்தியா
 ⁃ ஆள்கூறுகள்
28°38′03″N 79°01′42″E / 28.63407°N 79.02825°E / 28.63407; 79.02825
நீளம்168 km (104 mi)
வடிநில அளவு346 km2 (134 sq mi)
வடிநில சிறப்புக்கூறுகள்
துணை ஆறுகள் 
 ⁃ வலதுசுவால், இராம்காட், பெளவாலிகாட்

கோசி (Kosi River) அல்லது கௌஷிகி என்றும் அழைக்கப்படும் கோசி ஆறு, ராமகங்கா நதியின் துணை ஆறாகும். இது உத்தராகண்டம் மாநிலத்தில் குமாவோன் பகுதியில் உள்ள ஒரு முக்கியமான ஆறாகும்.[1] கைர் மற்றும் சிசே காடுகள் இந்த ஆற்றின் கரையில் காணப்படுகின்றன.[2] கோசி ஆற்றின் நீளம் 168 km (104 mi) கி.மீ. ஆகும். இதன் படுகை சுமார் 346 km2 (134 sq mi) சதுர கி.மீ. பரப்பளவில் பரவியுள்ளது.[3]

ஆற்றோட்டம்[தொகு]

கோசி ஆறு ராம்நகர் அருகே ஜிம் கார்பெட் தேசிய பூங்கா வழியாக பாய்கிறது

கோசி கௌசானிக்கு அருகில் உள்ள தரபாணி தாரிலிருந்து உருவாகி தெற்கு நோக்கி பாய்கிறது. சோமேஷ்வர் மற்றும் அல்மோரா நகரங்கள் வழியாகப் பாய்ந்து, குவாராப்பை அடைந்து, சுயால் நதியுடன் இணைகிறது.[4] குவாராப்பிலிருந்து, இது கைர்னா, கரம்பனி மற்றும் பெட்டல்காட் வழியாக மேற்கு நோக்கிப் பாய்கிறது. சால்ட் பட்டியை அடைந்த பிறகு, இது மோகன் வரை வடமேற்கு திசையில் பாய்கிறது. இதன்பின் இங்கிருந்து இது ஒரு கூர்மையான வளைவை எடுத்து தென்கிழக்கு நோக்கிப் பாயத் தொடங்குகிறது. திக்குலியைக் கடந்து, ராம் நகரில் சமவெளியில் இறங்குகிறது. சுமார் 70 mi (110 km) பயணம் செய்த பிறகு ராம்நகரிலிருந்து, சுல்தான்பூரில் உத்தரப்பிரதேச மாநிலத்திற்குள் நுழைகிறது. இது ராம்பூர் நகரின் இடப்புறம் வழியாகச் சென்று, உத்திரப் பிரதேசத்தின் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள சாகாபாத் வட்டத்தின் சாம்ராவ்ல் கிராமத்திற்கு அருகில் இராமகங்கையுடன் இணைகிறது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Negi, Himalayan Rivers, Lakes, and Glaciers, pg-49
  2. Negi, Himalayan Rivers, Lakes, and Glaciers, pg-89
  3. Bhatt, Ecology of the Mountain Waters, pg-44
  4. Aggarwal, Uttarakhand: Past, Present, and Future, pg-289
  5. Aggarwal, Uttarakhand: Past, Present, and Future, pg-289

நூல் பட்டியல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோசி_ஆறு_(உத்தராகண்டம்)&oldid=3793539" இலிருந்து மீள்விக்கப்பட்டது